நீங்க விபூதி சாப்பிடுவீங்களா? போச்சு!

Viboothi
Viboothi
Published on

விபூதி பல இந்திய மதங்களில் புனிதமாகக் கருதப்படும் ஒரு பொருள். இது பொதுவாக கோயில்களில் பயன்படுத்தப்பட்டு, பூஜைகள், தனிப்பட்ட வழிபாடுகளின் போது உடலில் பூசப்படுகிறது. இதில் சிலர் விபூதியை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இது சரியா? தவறா? என பலருக்கு கேள்வி எழுந்திருக்கும். இதுகுறித்த உண்மை என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம். 

விபூதி, பொதுவாகவே கோயில்களில் நெய் விளக்கில் கருங்காலியை எரித்து அதன் சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பல இந்திய மதங்களில் குறிப்பாக, சைவம் மற்றும் வைணவத்தில் முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. விபூதி, தெய்வீக சக்தியின் அடையாளமாகவும், தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு கவசமாகவும் கருதப்படுகிறது.‌ பக்தர்கள் விபூதியை நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தெய்வீக அருளைப் பெறுவதாக நம்புகின்றனர்.‌ 

விபூதியை ஏன் சாப்பிடுகிறார்கள்? 

சில ஆன்மீக நம்பிக்கைகளின் படி விபூதியை சாப்பிடுவதன் மூலம் ஒருவர் தெய்வீகத்துடன் நேரடியாக இணைந்து கொள்ளலாம். இது ஆன்மீக உயர்வை ஏற்படுத்தி, மோட்சத்தை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. சில சமயங்களில் குருக்கள் தங்கள் சீடர்களுக்கு விபூதியை சாப்பிடக் கொடுப்பார்கள். இது குரு-சீடன் உறவை வலுப்படுத்தி, சீடரின் ஆன்மீக வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.‌ 

விபூதியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நல நன்மைகள்: 

விபூதியில் உள்ள சில தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என சொல்லப்படுகிறது. இதைத் தோலில் பூசுவதால் சில தோல் நோய்கள் குணமாகும் என்றும் கூறுகின்றனர். விபூதியைத் தொடுவது, சாப்பிடுவது மன அமைதியை ஏற்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும். 

இதையும் படியுங்கள்:
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விபூதி மண் கலயம் மிதந்து வரும் அதிசய சிவன் கோயில் தீர்த்தம்!
Viboothi

விபூதியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல ஆபத்துகள்: 

கோயில்களில் பயன்படுத்தப்படும் விபூதி சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும். விபூதியில் உள்ள சில தாதுக்கள் உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. சில நபர்களுக்கு விபூதி பூசுவதால் அலர்ஜி ஏற்படும் அபாயம் உள்ளது. 

விபூதியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், இது ஒரு ஆன்மீக நடைமுறையாக இருப்பதால், விஞ்ஞானி ரீதியாக இதை ஆய்வு செய்வது கடினம். இருப்பினும், சில ஆய்வுகள் விபூதியில் உள்ள சில தாதுக்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com