காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள்! 

Pros and cons of using contact lenses!
Pros and cons of using contact lenses!
Published on

கண் பார்வை பிரச்சினைகளுக்கு கண்ணாடிகள் பயன்படுத்துவது ஒரு பாரம்பரிய தீர்வாக இருந்தாலும் காலப்போக்கில் காண்டாக்ட் லென்ஸ்கள் பிரபலமடைந்துள்ளன.‌ இவை கண்களின் மேற்பரப்பில் நேரடியாக அணியப்படும் மெல்லிய வளைந்த தகடுகள் போன்றவை. இவை கண்ணாடிகளை விட மிகவும் இயற்கையான தோற்றத்தை அளிப்பதோடு, பல்வேறு செயல்பாடுகளில் அதிக சுதந்திரத்தையும் வழங்குகின்றன. இருப்பினும், காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதால் நன்மை தீமைகள் என இரண்டுமே இருக்கின்றன. இந்தப் பதிவில் காண்டாக்ட் லென்ஸ் பயன்பாட்டின் சாதக பாதகங்களை விரிவாகப் பார்க்கலாம்.‌ 

காண்டாக்ட் லென்ஸ் பயன்பாட்டின் சாதகங்கள்: 

காண்டாக்ட் லென்ஸ்கள் கண்ணின் மேற்பரப்பில் நேரடியாக அமருவதால் கண்ணாடிகளைப் போலவே தெளிவான பார்வையை வழங்குகின்றன. குறிப்பாக, விளையாட்டு, நீச்சல் போன்ற செயல்பாடுகளின்போது கண்ணாடிகளை விட இவை சிறப்பாக செயல்படுகின்றன. 

இந்த லென்ஸ்கள் கண்ணாடிகளைப் போல மூக்கில் அழுத்தம் கொடுப்பதில்லை. இதனால், நீண்ட நேரம் அணிந்தாலும் வசதியாகவே இருக்கும். 

கண்ணாடிகளில் ஏற்படும் ஒளி வளைவு மற்றும் பிரதிபலிப்பு போன்ற பிரச்சனைகள் காண்டாக்ட் லென்ஸில் குறைவு. இதனால் தெளிவான மற்றும் இயற்கையான காட்சி கிடைக்கும். பல்வேறு வகையான காண்டாக்ட் லென்ஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதனால், ஒரு நபர் கண்பார்வை பிரச்சனை மற்றும் அவரது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.‌

காண்டாக்ட் லென்ஸ்கள் கண்ணாடிகளை விட நவீன தோற்றத்தை அளிப்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. 

காண்டாக்ட் லென்ஸ் பயன்பாட்டின் பாதகங்கள்: 

காண்டாக்ட் லென்ஸ்க்களை முறையாக பராமரிக்காவிட்டால் கண் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது கண் சிவந்து போதல், வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
காண்டாக்ட் லென்ஸால் கண் பார்வை இழந்த 'வானம்' பட நடிகை!
Pros and cons of using contact lenses!

நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் கண் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு காண்டாக்ட் லென்ஸ் அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். இதனால் அரிப்பு, கண் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

நீண்ட காலமாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதால் கண் பார்வையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை சரியாக அணியாவிட்டால் கண் பார்வை மேலும் பாதிக்கப்படும். 

கான்டக்ட் லென்ஸ்கள் கண்ணாடிகளை விட பல நன்மைகளை வழங்கினாலும், அதை சரியாக பயன்படுத்தாவிட்டால் பல பாதகங்களை ஏற்படுத்தும். எனவே காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதற்கு முன் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மேலும் காண்டாக்ட் லென்ஸை சரியாக பராமரித்து கண் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com