சொரியாசிஸ் நோயை எதிர்கொள்ளும் விதமும், தடுப்பு முறைகளும்!

அக்டோபர் 29, உலக சொரியாசிஸ் தினம்
World Psoriasis Day
World Psoriasis Day
Published on

சொரியாசிஸ் என்பது மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்பால் ஏற்பாடும் ஒரு மரபணுக் கோளாறு ஆகும். இது பல்வேறு அறிகுறிகளைக் கொண்ட ஒரு நாள்பட்ட சரும நிலையாகும். சொரியாசிஸ் எனப்படும் தடிப்பு சரும அழற்சி உள்ளவர்களுக்கு உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படும். இதன் அறிகுறிகளைப் புரிந்து கொண்டு, தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தனி நபர்கள் தங்கள் தடிப்பு சரும அழற்சியை மிகவும் திறமையாக நிர்வகிக்க முடியும்.

சொரியாசிஸ் நோயின் அறிகுறிகள்: உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் காணப்படும். தடிமனான வெள்ளி நிற செதில்களால் மூடப்பட்டு இருப்பது போல இருக்கும். அரிப்பு, பிளவுகள் சில நேரத்தில் வலி போன்றவை இருக்கும். சருமம் வறண்டு சில இடங்களில் விரிசல் மற்றும் இரத்தம் வரலாம். தீவிரமான அரிப்பு மற்றும் அசௌகரியம் இருக்கும்.

பொதுவாக, முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் உச்சந்தலையில் காணப்படும், அதேபோல, உடலில் வேறு பகுதிகளிலும் காணப்படலாம். மார்பகங்கள். அக்குள் மற்றும் இடுப்பு போன்ற சரும மடிப்புகளில் சிவப்பு நிற மென்மையான புண்கள் தோன்றக் கூடும். பெரும்பாலும் நடு முதுகு, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். நகம், முடி போன்றவற்றை பாதிக்கும். அதனால் இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நோயின் தீவிரம் அதிகரிப்பதன் காரணங்கள்: சுடுநீரில் குளிப்பது, மன உளைச்சலால் எதையும் வெளியில் சொல்லாமல் மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டிருப்பது, அடிக்கடி கோபப்படுவது, கோழி, காடை, கவுதாரி, வாத்து போன்றவற்றை உண்பது, சொத்தைப்பல், நகத்தை உடலில் அழுத்தி தேய்த்து குளிப்பது, நார் போட்டு குளிப்பது போன்றவற்றால் அதிகமாகும். புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால், இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால், தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருந்தால் இது அதிகமாகலாம். 40 வயதிற்கு மேல் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு தொப்பையுடன் சேர்ந்து சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகமாவது போல சொரியாசிஸும் வரலாம்.

சிகிச்சை முறைகள்:

அமைதியான மனம்: இதற்கு முதன்மையான சிகிச்சை முறை என்பது உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருத்தல். எனவே, மன அழுத்தம் இன்றி வாழ்வது மிகவும் முக்கியம். மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா. தியானம் போன்றவை மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
தம்பதியரிடையே அன்பையும் காதலையும் அதிகமாக்கும் 2 - 2 - 2 விதி பற்றி தெரியுமா?
World Psoriasis Day

சூரிய வெளிச்சம்: சூரிய வெளிச்சம் உடலில் படாத இடங்களில் நோயின் தன்மை தீவிரமாகும். சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் ரேஸ் அளவுக்கு அதிகமாக வளரக்கூடிய சருமத்தைக் கட்டுப்படுத்தி இந்நோயை சரியாக்கும் வல்லமை படைத்தது. அதனால்தான் சித்த வைத்தியத்தில் வெட்பாலை என்கிற தைலத்தைத் தடவி சொரியாசிஸ் நோயாளிகளை வெயிலில் நிற்க சொல்லி சிகிச்சை தருவார்கள். வெளிநாடுகளில் டெட்சி எனப்படும் அடர்த்தி அதிகமான உப்புக் கடலில் மிதந்து பின்னர் சூரிய ஒளிக் குளியல் எடுத்துக் கொள்வார்கள். இது சொரியாசிஸ் சரி செய்வதற்கான சரியான சிகிச்சை முறை.

ஆரோக்கியமான உணவு வகைகள்: பழங்கள், காய்கறிகள், முழு தானிங்கள், மெலிந்த புரதங்கள் போன்ற சமச்சீர் உணவுடன் போதுமான அளவு நீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்: புகைப்பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்கும். மதுவை குறைத்துக்கொள்ள வேண்டும். போதுமான தூக்கமும் அவசியம். பரிந்துரைக்கப்பட்ட மேற்பூச்சு சிகிச்சைகளையும், மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சொரியாசிஸ் நோய் உள்ளவர்களை குடும்பத்தினர் அன்போடு கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com