Pudina tea prevent winter colds and flu
Pudina tea prevent winter colds and fluhttps://www.youtube.com

குளிர்கால சளி, காய்ச்சல் வராமல் தடுக்கும் புதினா டீ!

Published on

புதினா புத்துணர்ச்சியூட்டும் நறுமணமுள்ள மூலிகைகளில் ஒன்றாகும். இது குமட்டல் உணர்வு, வயிற்றுப் பிடிப்பு, சளி காய்ச்சல், வாய் துர்நாற்றம், அஜீரணம், போன்றவற்றைப் போக்கி, உடலை ஆரோக்கியமாகவும், சரும பளபளப்பு, தலைமுடி வளர்ச்சியும் தருகிறது.

1. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடுகிறது: நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் சளி மற்றும் காய்ச்சலைப் போக்க உதவுகிறது. குளிர்காலத்தில் தினமும் ஒரு சூடான கப் புதினா டீயைக் குடிப்பதால் தொண்டை கரகரப்பு, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை தடுக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

2. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது: இதில் உள்ள புத்துணர்ச்சி மற்றும் நன்மை பயக்கும் மெந்தோல் எனும் பொருள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவுகிறது. அதேசமயம் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளையும் அழிக்கும்.

3. சருமம் மற்றும் தலைமுடியை மேம்படுத்துகிறது: முகப்பருவால் ஏற்படும் சிவப்பைக் குறைக்க உதவுகிறது. அதேநேரத்தில், ஆன்டிசெப்டிக் பண்புகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுத்து பருக்கள் வராமல் தடுக்கின்றன. சொறி, மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. இது பொடுகைப் போக்க உதவுகிறது. புதினா தேநீர் கொண்டு தலைமுடியைக் கழுவுவதன் மூலம் கூந்தல் நன்கு வளர்கிறது.

4. அஜீரணத்தை குறைக்கிறது: இந்தத் தேநீரில் உள்ள மெத்தனால் என்ற பொருள் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. செரிமான அமைப்பில் உள்ள தசைகளை தளர்த்துகிறது. அதனால் மலச்சிக்கலை தீர்க்கிறது. இது வயிற்று வலியைத் தணிக்கிறது மற்றும் வீக்கம் மற்றும் அஜீரணத்தின் பிற அறிகுறிகளைக் குறைக்கிறது.

5. உடல் எடையை குறைக்க உதவுகிறது: இந்தத் தேநீரின் வாசனை தற்காலிகமாக பசியைத் தடுக்கும் என்றும், மக்கள் குறைவான கலோரிகளை உட்கொள்வதோடு, குறைவான பசியையும் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

6. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது: இது மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், மன அமைதியைத் தூண்டுவதிலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
இரும்புச் சத்து அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்!
Pudina tea prevent winter colds and flu

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைவதைத் தடுத்து, செயல்திறனின் வேகத்தை அதிகரிக்கும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற கலவைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

8. வயிறு மற்றும் மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கிறது: வயிற்று வலியை குணப்படுத்துவதுடன், பெண்களின் மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வயிற்றைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

புதினா தேநீர் செய்வது எப்படி?: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், அதை வடிகட்டி, தேன் சேர்த்துப் பருகவும்.

logo
Kalki Online
kalkionline.com