முள்ளங்கி, சமைத்து உண்ணக்கூடிய கிழக்கு வகையைச் சேர்ந்தது. இதன் நீண்ட கிழக்கு மட்டுமல்ல, அதனுடைய இலை மற்றும் விதைகள் கூட மருத்துவ குணங்கள் கொண்டவை. முள்ளங்கி உடலை குளிர்ச்சியாக்கும். சிறுநீரைப் பெருக்கி உடற் கழிவுகளை வெளியேற்றும். பசியை தூண்டி தாதுவை பலப்படுத்தும்.
நாட்டு முள்ளங்கி வெள்ளை நிறத்தில் நீண்ட வடிவம் கொண்டு இருக்கும். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவ குணங்கள் அதிகமுள்ளது. சிவப்பு முள்ளங்கி இது சமையலுக்கு சிறந்தது. நீலம் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த முள்ளங்கி சமையலுக்கு பயன்படுத்தும் வகை.
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, அதனை கரைக்கவும் உதவுகிறது. தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், கற்கள் கரைந்து சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.வெள்ளை முள்ளங்கி சாறு 30 மி.கி. தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டு வர சிறுநீரகக் கோளாறுகள், நீர்த்தாரை பிரச்னைகள் சரியாகும்.
முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி காய் வைத்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, கார் போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு கைப்பிடி அளவு எடுத்து சேர்த்து இடித்து பொடி செய்து 25 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி 50 மில்லியாக சுண்டியவுடன் வடிகட்டி 25 மில்லியை இரு முறை சாப்பிட சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்பட்ட உடல் வீக்கம் விரைவில் வற்றிவிடும்.
முள்ளங்கியை உணவுடன் சாப்பிட்டு வர உடலில் சூட்டை பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்திருக்கும்.சிறுநீரை எளிதாக வெளியேறும், பசியை உருவாக்கி மலச்சிக்கலைப் போக்கும். மூலம் மற்றும் சிறுநீரகக் கல் அடைப்பு குணமாகும்.
முள்ளங்கி சாறு எடுத்து 5 மி.கி. 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர, மலச்சிக்கல்,சிறுநீர் சுருக்கு, சிறிய வாத நோய்கள் சரியாகும். முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக சீவி உலர்த்தி கைப்பிடி அளவு எடுத்து கஞ்சி செய்து குடித்து வர வீக்கம் மற்றும் சுவாசக் கோளாறுகள் சரியாகும்.
பச்சை முள்ளங்கி சாறு எடுத்து சிறிதளவு இந்துப்பு சேர்த்து பொறுக்கும் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டு விட காது குத்தல், காது வலி மற்றும் காதில் சீழ் வடிவது சரியாகும்.
முள்ளங்கியில் உள்ள என்சைம்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகிறது. எனவே, முள்ளங்கியை அடிக்கடி சாப்பிடுவதால், கல்லீரலில் உள்ள நச்சு நீக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தைத் தருவதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முள்ளங்கி சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர அடிக்கடி ‘அபார்ஷன்’ ஏற்படும் பெண்களுக்கு பூரண நிவாரணம் கிடைக்கும். முள்ளிங்கி விதையை வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர அது ஆண்களுக்கு ‘காயகல்பம்’ போன்ற சக்தியை தர வல்லது. இதில் கந்தகச்சத்து இருப்பதால் சரும நோய்களைப் போக்கும்.