தென்கிழக்கு ஆசியாவின் அழகான பழங்களில் ஒன்றான ரம்புட்டான் அதன் தனித்துவமான தோற்றத்தாலும், இனிமையான சுவையாலும் பலரை கவர்ந்திழுக்கிறது. இது வெறும் சுவையான பழம் மட்டுமல்ல பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்ட ஒரு இயற்கையின் பரிசு. இந்தப் பதிவில் ரம்புட்டான் பழத்தின் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் மூலமாக கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாகக் காண்போம்.
ரம்புட்டான் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ரம்புட்டான் பழம் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் குறிப்பாக வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது.
ரம்புட்டானில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
இந்த பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகளை வலுப்படுத்துகிறது.
இதில் குறைந்த கலோரி உள்ளதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ரம்புட்டான் சிறந்த பழமாகும்.
இதில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி, செரிமானத்தை சீராக மாற்றி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
ரம்புட்டானில் உள்ள வைட்டமின் சி மற்றும் கொலாஜன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.
ரம்புட்டான் பழத்தை சாப்பிட, முதலில் அதன் மேல் உள்ள முட்களை நீக்க வேண்டும். பின்னர், அதன் உள்ளே உள்ள வெள்ளை நிற பழத்தை உண்ண வேண்டும். இதை நேரடியாகவோ அல்லது ஜூஸ் போலவோ செய்து சாப்பிடலாம். உண்மையிலேயே தனித்துவமான சுவை கொண்ட இந்த பழத்தை, நீங்கள் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும். இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு தாராளமாக அவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்.
எனவே, இந்த ரம்புட்டான் பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.