அதிகாலை 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா… அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான்!

Wakeup 3AM
Wakeup 3AM
Published on

சில சமயங்களில் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி அளவில் திடீரென முழிப்பு வருவது நம்மில் பலருக்கு நடக்கும் ஒரு வழக்கமான விஷயம்தான். சுற்றிலும் ஒரே அமைதியாக இருக்கும் அந்த நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்து உட்காருவது சிலருக்கு பயத்தையும் பலருக்கு குழப்பத்தையும் கொடுக்கும். இந்த நேரத்தை நமது முன்னோர்கள் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். ஆனால் மருத்துவ உலகம் இதை தூக்கமின்மை பிரச்சனை என்று கூறுகிறது. இது நன்மையா அல்லது நோயா என்பதைப் பார்க்கலாம் வாங்க.

ஆன்மீகப் பார்வை!

இந்திய பாரம்பரியத்தின்படி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையிலான நேரம் பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் சக்தி மிக அதிகமாக இருக்கும் என்பது பலருடைய ஆழமான நம்பிக்கை. தேவர்கள், சித்தர்கள் சஞ்சரிக்கும் இந்த வேளையில் நாம் விழித்தெழுந்து தியானம் செய்வதோ, நமது இஷ்ட தெய்வங்களை வழிபடுவதோ பெரும் புண்ணியத்தை சேர்க்கும். 

மன அமைதியும் நேர்மறை எண்ணங்களும் இந்த அதிகாலை பொழுதில் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும். நமது மூளை அலைகள் இந்த நேரத்தில் மிகவும் அமைதியான நிலையில் இருக்கும் என்பதால் நாம் நினைக்கும் காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். உங்களை அறியாமலேயே இந்த நேரத்தில் முழிப்பு வருகிறது என்றால் பிரபஞ்சம் உங்களுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை சொல்ல முயற்சிக்கிறது என்று கூட சிலர் உறுதியாக நம்புகிறார்கள்.

அறிவியல்!

ஆன்மீகம் ஒரு பக்கம் இருந்தாலும் அறிவியல் ரீதியாக இதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. நமது உடல் கடிகாரம் அதாவது சர்க்காடியன் ரிதம் சில நேரங்களில் சீர்குலைந்து போகும்போது நள்ளிரவில் விழிப்பு வரலாம். இன்றைய அவசர உலகில் பலருக்கும் இருக்கும் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் கவலைகள் நமது தூக்க சுழற்சியை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும். 

தூங்குவதற்கு முன்பு மொபைல் போன் பார்ப்பது மூளையை விழிப்பிலேயே வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் நாம் இரவில் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் ஏற்படும் சிக்கல்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடுவது போன்றவையும் இந்த 3 மணி விழிப்பிற்கு காரணமாக அமையலாம். நவீன மருத்துவத்தின்படி இது தூக்கமின்மை பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக கூட பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'சக்கர வியூகம்': இது ஒரு போர்க்கலை மட்டுமல்ல... ஒரு 'அல்ஜிப்ரா' கணக்கும் கூட!
Wakeup 3AM

இப்போது இது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும். இதை மிக எளிதாக நீங்களே கண்டுபிடித்து விடலாம். அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வரும்போது உங்கள் மனம் மிகவும் அமைதியாக இருந்து மீண்டும் படுத்தால் நன்றாக தூக்கம் வருகிறதா, விழித்திருந்து அடுத்த நாள் முழுவதும் உங்களால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகிறதா என கவனியுங்கள். அப்படி இருந்தால் அது நிச்சயம் ஒரு நல்ல விஷயம்தான். 

அதை ஒரு அதிர்ஷ்டமாக நினைத்து அந்த அமைதியான நேரத்தை தியானம் செய்யவோ உடற்பயிற்சி செய்யவோ அல்லது புத்தகம் படிக்கவோ நீங்களாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு பதிலாக, விழித்தவுடன் நெஞ்சு படபடப்பாக இருப்பதோடு மீண்டும் தூங்க முடியாமல் தவித்து அடுத்த நாள் முழுவதும் உடல் சோர்வாகவும் மன உளைச்சலாகவும் உணர்ந்தால் உங்கள் உடலிலும் மனதிலும் ஏதோ அதிகப்படியான அழுத்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா?
Wakeup 3AM

அதிகாலை 3 மணி விழிப்பு, பிரம்ம முகூர்த்தத்தின் அழைப்பாக இருந்தாலும் சரி அல்லது தூக்கமின்மையின் அறிகுறியாக இருந்தாலும் சரி உங்கள் உடல் நலனையும் மன நலனையும் பொறுத்து அதை நீங்கள் சரியாக கையாள வேண்டும். தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com