கொத்தமல்லி & மாதுளை விதை இந்த காம்பினேஷன் எதுக்கு நல்லது?

Bad Breath
Bad Breath
Published on

வாய் துர்நாற்றம், பலர் அனுபவிக்கும் ஒரு பரவலான பிரச்சனையாகும். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இது பாக்டீரியாவால் ஏற்படும் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வாய் துர்நாற்றத்தை எளிதில் குணப்படுத்த முடியும். நாம் நம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன் உணவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.

உலர்ந்த வாயானது துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும். வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, ​​வாய் வறண்டு போகத் தொடங்குகிறது. இது உடலில் தண்ணீர் இல்லாததாலும் ஏற்படும்.

நாம் உட்கொள்ளும் ஏதாவது உணவோ அல்லது மருந்தோ கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே குளிர்காலத்திலும் கோடை காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு உடலின் நீர் தேவையும் வேறுபடுகிறது. எனினும், சராசரியாக ஒருவர் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரைக் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நமக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால், எப்போதும் நம்முடன் ஒரு டூத் பிரஷ்ஷை வைத்துக்கொள்ளுவது நல்லது. ஒவ்வொரு முறை நாம் சாப்பிட்ட பிறகும், ஃவுளூரைடு மற்றும் ஆன்டிபாக்டீரியா கொண்ட பற்பசையால் பல் துலக்கவும். பற்களை நன்கு தேய்த்து நல்ல தண்ணீரால் பலமுறை நம் வாயினை கொப்பளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
50 வயதைக் கடந்தவர்கள் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் தெரியுமா? 
Bad Breath

நம்முடைய நாக்கை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது நாக்கிலிருந்து பாக்டீரியா, பூஞ்சை மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு நாக்கை துடைப்பது உதவுகிறது. இது நமது வாயின் துர்நாற்றத்தை நீக்குகிறது.

கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும். உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம். அதேபோல் மாதுளை விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com