அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான 6 அறிகுறிகள்... ஜாக்கிரதை!

Fat Man With chest pain
Symptoms of High Cholesterol
Published on

அதிக கொலஸ்ட்ரால் என்பது உலக அளவில் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு மோசமான சுகாதார நிலையாகும். நமது ரத்த ஓட்டத்தில் அதிகப்படியான கொழுப்பு இருப்பது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உயர் கொலஸ்ட்ரால் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது மூலமாக அதற்கான முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு, இருதய ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தலாம். 

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்:  

  1. Xanthomas: Xanthomas என்பது சருமத்தின் கீழ், குறிப்பாக கண்கள், முழங்கைகள், முழங்கால்கள் அல்லது பித்தம் ஆகியவற்றை சுற்றியுள்ள கொழுப்பு படிவங்களாகும். கொழுப்பு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து புடைப்புகள் அல்லது முடிச்சுகள் போல தோன்றுவது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறிக்கும். 

  2. மார்பு வலி: அதிக கொலஸ்ட்ரால் தமனி அழற்சிகு வழிவகுக்கும். இதனால் தமனிகள் குருக்குவதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, மார்பு வலி அல்லது இதயத்தில் அசௌரியம் ஏற்படுகிறது. இதை ஆஞ்சினா என அழைப்பார்கள். 

  3. மூச்சுத் திணறல்: அதிக கொலஸ்ட்ரால் காரணத்தால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படும் போது அது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதிக்கலாம். இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உடல் உழைப்பின் போது அதிக மூச்சுத் திணறல் ஏற்படலாம். 

  4. தோலின் நிறமாற்றம்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக இருந்தால் மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதனால் தோல், கண்கள் போன்றவை மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இது அதிகப்படியான கொழுப்பு காரணமாக கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கிறது. 

  5. பித்தப்பை கற்கள்: பித்தப்பை கற்கள் உருவாவதற்கு அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் கடுமையான வயிற்று வலி, வீக்கம் மற்றும் குமட்டல் ஏற்படும். 

  6. கொழுப்பு கல்லீரல் நோய்: உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் கல்லீரல் விரிவடைந்து சோர்வு, வயிற்று அசௌகரியம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், கல்லீரல் செயலிழப்புகூட ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். 

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் உடல் எடையைக் குறைக்க சில எளிய டிப்ஸ்! 
Fat Man With chest pain

அதிக கொலஸ்ட்ரால் அளவு தீவிர அறிகுறிகளை உருவாக்கவில்லை என்றாலும், மேற்கூறிய அறிகுறிகளைப் புரிந்துகொண்டு ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதற்கான முறையான சிகிச்சையைப் பெற்று உடல் நலத்தை காத்துக்கொள்ள உதவியாக இருக்கும். எனவே உடலின் கொலஸ்ட்ரால் அளவை முறையாக கண்காணித்து, சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அதன் அளவை நிர்வகிப்பதற்கும், இதய நோய் சார்ந்த அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com