சிவப்பு கொய்யா Vs வெள்ளை கொய்யா: எது சிறந்தது?

Red Guava Vs White Guava Which Is Better?
Red Guava Vs White Guava Which Is Better?Image credits: Mashed
Published on

ந்த ஒரு பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலின் பல பிரச்னைகள் தீரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த பழம் வேறு எதுவும் இல்லை கொய்யாப்பழம்தான். இந்தப் பதிவில் கொய்யாப்பழத்தின் நன்மைகளைப் பற்றியும் அவற்றில் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் காண்போம்.

கொய்யாப்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் இருக்கிறது. கொய்யாப்பழத்தில் Dietary fibre இருப்பதால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கொய்யாப்பழத்தை, ‘சூப்பர் ப்ரூட்’ என்றும் கூறுகிறார்கள்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய இது உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது, உடல் எடைக் குறைக்க வெகுவாக உதவுகிறது. உடலில் ஏற்படும் புற்றுநோயை  குணமாக்குகிறது, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சிவப்பு கொய்யாவில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சின் அளவு குறைவு, விதைகள் குறைவாக இருக்கும். சிவப்பு கொய்யாவில் Carotenoid என்னும் பிக்மெண்ட் உள்ளது. இதுவே கொய்யா சிவப்பாக இருப்பதற்கான காரணமாகும். காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறத்திற்கு இந்த Carotenoids பிக்மெண்டே காரணமாகும்.

இதனால், வெள்ளை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யாவின் சுவையில் சிறிதாக மாற்றங்கள் இருக்கும். சிவப்பு கொய்யாவின் சுவை நன்றாக இருப்பதால், அதில் ஜூஸ் செய்து குடிப்பது நல்லது. சிவப்பு கொய்யாவின் சுவை ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காயின் கலவைப்போன்று இருக்கும். இதனால் இதை ‘ஆப்பிள் கொய்யா’ என்றும் அழைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அல்சரை போக்க எளிய வழிமுறைகள்!
Red Guava Vs White Guava Which Is Better?

வெள்ளை கொய்யாவில் Carotenoids பிக்மெண்ட் கிடையாது. இதில் அதிகமாக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் சி மற்றும் விதைகள் உள்ளன. மற்ற பழங்களை ஒப்பிடுகையில், வெள்ளை கொய்யாவில் அதிக அளவில் வைட்டமின் சி இருக்கிறது. நான்கு ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதற்கு பதில் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதும். அத்தனை வைட்டமின் சியும் அதிலேயே கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொய்யாப்பழத்தை அதிகமாக பானங்களிலும், ஜாமிலும் பயன்படுத்துகின்றனர். கொய்யா இலையை டீ போடப் பயன்படுத்துகின்றனர். கொய்யாப்பழத்தை இரவில் உண்பதால் சளி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால் இரவில் இந்தப் பழத்தை உண்பதைத் தவிர்ப்பது சிறந்தது. தினமும் ஒரு கொய்யாவை உணவுடன் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய பலன்களைத் தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com