அவதிப்படுத்தும் குளிர்கால மார்பு சளிக்கு நிவாரணம்!

Relief for the winter chest cold
Relief for the winter chest coldhttps://www.onlymyhealth.com

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தொண்டை மற்றும் நுரையீரலில் சளி படிவதால் கடுமையான இருமல் மற்றும் தொண்டையில் வலியை ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, இந்த சளி, மூச்சுத் திணறல், தூங்குவதில் சிரமம், தொண்டை வலி, மார்பில் படிந்திருக்கும் சளியை  மற்றும் சுவாச நோய் தொற்றுகளையும் மற்றும் நோய் தொற்றுகளையும் ஏற்படுத்தும். மார்பில் படிந்திருக்கும் சளியை எப்படிப் போக்குவது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள சளியை அகற்ற உதவும். இது தொண்டை புண்ணை ஆற்றுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

ஜூஸ், சூப் போன்ற திரவங்களைக் குடிக்கலாம். இவை தவிர, காபின் நீக்கப்பட்ட தேநீர், பழச்சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும், உங்கள் உடலை எப்போதும் சூடாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது அது இயற்கையாகவே சளியை தடுத்து வெளியேற்ற உதவுகிறது.

வெந்நீரில் குளிப்பது, வெதுவெதுப்பான ஆடைகளை அணிவது, சூடான போர்வைகளைப் பயன்படுத்துவது சளி, இருமலைப் போக்கி உடனடி தீர்வு கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ குணமிக்க கருப்பு நிற மஞ்சளின் மகிமை தெரியுமா?
Relief for the winter chest cold

எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை சளியை வெளியேற்ற உதவும். சளி, இருமல் மற்றும் அதிகப்படியான சளிக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மிளகாய் போன்ற கேப்சைசின் கொண்ட உணவுகள் சைனஸை அழிக்கவும் சளியை வெளியேற்றவும் உதவுகின்றன. அவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது மார்பு சளியை விரட்ட பெரிதும் துணை புரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com