குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வேர்க்காய்கறிகள்!

Root Vegetable helps boost immunity in winter
Root Vegetable helps boost immunity in winterhttps://www.treehugger.com

பொதுவாக, குறைவான உடல் இயக்கம் காரணமாக குளிர்காலத்தில் பலருக்கும் உடல் எடை கூடும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் எளிதில் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடை கூடாமல் இருக்கவும் உதவும்  வேர்க்காய்கறிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கேரட்: பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் வைட்டமின் ஏ நிறைந்தது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்துகிறது.

இஞ்சி: குளிர்காலத்தில் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற அதன் கலவைகள் செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. அதன் தெர்மோஜெனிக் தன்மை உடல் வெப்பநிலையை குறைக்கிறது. இதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடு அதிகரிப்பதும், எடை குறைப்பும் நிகழ்கிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு: உடல் எடையை குறைக்க உதவும் பெக்டின் என்பது ஒரு வகை இயற்கை அமிலமாகும். இது இனிப்பு உருளைக்கிழங்கில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். மேலும், இது வயிற்றில் கனமான உணர்வை உருவாக்குகிறது. இதை உண்டால் அடிக்கடி பசி ஏற்படாது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கு குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது இன்சுலின் எதிர்ப்பின் சாத்தியத்தையும் குறைக்கும்.

டர்னிப்: இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் சி, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கழிவுகளை வெளியேற்றி விடுவதால், உடல் எடை அதிகரிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
இதயத்தை பாதுகாக்கும் ஆறு வகை உணவுகள் தெரியுமா?
Root Vegetable helps boost immunity in winter

முள்ளங்கி: முள்ளங்கியில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் போன்ற கலவைகள் உணவை உடைக்கும் நொதிகளைத் தூண்டி செரிமானத்திற்கு உதவுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது.

பூண்டு: இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் பிற கந்தக சேர்மங்கள் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உள்ளன. இதனால் எடை கூடாமலும், உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com