

உலகிலேயே மிகவும் அழகான பூ எது என்று கேட்டால், டக் என்று ரோஜா என்ற எல்லோராலும் கூற முடியும். அதன் அழகை மட்டும் தான் நாம் பார்க்கிறோமே ஒழிய அதன் பின்னால் இருக்கும் மருத்துவ குணங்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அறிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. ரோஜாவின் அத்தியாவசிய எண்ணெய் பல ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
ரோஜா எண்ணெய் மனச்சோர்வை போக்குவதோடு, பதட்டத்தை எதிர்த்து போராடுவதாகவும் அறியப்படுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் , ரோஜா எண்ணெய்யினால் முற்றிலுமாக விரட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதை காயம்பட்ட இடத்தில் தடவினால் தொற்று வராமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது. செப்டிக் ஆகாமல் பாதுகாக்கிறது என்பதால் இந்த எண்ணெய்யை மேல்பூச்சாக தடவி வரலாம். வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தம்பதியினர் இடையே பாலுணர்வைத் தூண்டும் ஒரு கிரியா ஊக்கியாக பொதுவாகவே ரோஜாப் பூவை கூறுவார்கள். இதன் எண்ணெய்யை மருத்துவர் அறிவுரை மூலம் எடுத்துக் கொள்வதால், பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு, சாதகமாக உதவி புரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த எண்ணெய் பற்களின் ஈறுகளையும், தலையில் உள்ள முடி வேர்களையும் பலப்படுத்துகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் கை கால்களில் உள்ள தசைப் பகுதிகளில் வலு இழக்கும் தன்மையிலிருந்து பாதுகாப்பு அளிக்க வல்லதாக நம்பப்படுகிறது.
வெளிப்புற காயங்களில் இருந்து உண்டாகும் தொற்றை தடுப்பதோடு அல்லாமல் டை ஃபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சிறுநீர் பாதை போன்ற உள் பாக்டீரியா தொற்றுக்களையும் தடுக்கிறது.
ரோஜா அத்தியாவசிய எண்ணெய், ஒரு நல்ல மலம் இளக்கியாக செயல்படுகிறது. எந்தவித பாதகமான பக்க விளைவையும் ஏற்படுத்தாதாம்.
இது, நரம்புகளுக்கு ஒரு நல்ல டானிக் என்று கூறப்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள் சில பேருக்கு கைகளில் ஒரு நடுக்கம் உண்டாகும். இது நரம்புகளுக்கு வலிமையைக் கொடுத்து அந்த நடுக்கத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறப்படுகிறது.
கருப்பைக் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், இரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது. அதாவது கருப்பையை சுத்திகரிக்க மிகவும் உதவுகிறதாம்.
இந்த எண்ணெய் மேனிக்கு பளபளப்பு தருவதோடு அல்லாமல், புத்துணர்ச்சியோடும் நம்மை வைத்துக்கொள்ள உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, குறைக்கிறது.
எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் அத்தனை ஆரோக்கிய பண்புகளைக் கொண்ட இந்த ரோஜா அத்தியாவசிய எண்ணெய்யை, மருத்துவரின் ஆலோசனையுடன் நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?