'ரெட் கோல்ட்' என அழைக்கப்படும் குங்குமப் பூ அமைதிப்படுத்தும் குணம் கொண்ட ஓர் அபூர்வ மூலிகை. இதில் நம் உடலில் உண்டாகும் மன அழுத்தம் மற்றும் வருத்தங்களைக் குறைக்க உதவும் சஃப்ரனால் மற்றும் குரோசின் என்ற கூட்டுப்பொருட்கள் உள்ளன. இதனுடன் தேன் சேர்த்து டீ தயாரித்து தூங்கச் செல்வதற்கு முன் அருந்தினால் தேனின் ஆறுதல்படுத்தும் குணமும் சேர்ந்து நம் உடலையும் மனதையும் தளர்வுறச் செய்து அமைதியுடன் உறங்கச் செல்ல நம்மை தயார்படுத்தும்.
சஃப்ரான்-ஹனி (Saffron-Honey) இரண்டிலுமுள்ள சாந்தப்படுத்தும் குணமானது உடனடியாக தூக்கம் பெற உதவும். தேனில் உள்ள குளுகோஸ் இன்சுலினை படிப்படியாக வெளியேற்றவும், மெலட்டோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யவும் உதவும். மெலட்டோனின் ஸ்லீப் சைக்கிளை ஒழுங்குபடுத்தி ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி கோலும்.
சஃப்ரான் தரமான ஜீரணத்துக்கு உதவக்கூடிய மூலிகை. ஹனியிலுள்ள பிரிபயோடிக் குணங்கள் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். படுக்கச் செல்லும் முன் இந்த டீ அருந்துவதால் குடலில் வீக்கம் ஏதும் உண்டாகாமல் ஸ்மூத்தான இயக்கம் நடைபெற்று தொந்தரவில்லாத தூக்கம் கிடைக்கும்.
சஃப்ரான்-ஹனி இரண்டுமே மனதை மகிழ்ச்சியான மூடிற்கு எடுத்துச் செல்லக் கூடியவை. இதனால் மூளையில் செரோடோனின் உற்பத்தி அளவு அதிகரிக்கும். அப்போது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிட்டிவ் மனநிலை உருவாகும். தலையீடில்லாத தரமான தூக்கம் கண்ணைத் தழுவும். இவை இரண்டிலுமே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். அவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்களை சிதைவடைவதிலிருந்து காப்பாற்றும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து மொத்த ஆரோக்கியமும் மேன்மையுற உதவும்.
சஃப்ரானின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும், தேனின் ஆன்டி மைக்ரோபியல் குணமும் தொண்டை அழற்சியை நீக்கி இருமலை குணப்படுத்த உதவும். இதனால் இரவில் தூக்கம் கெட வாய்ப்பிருக்காது. சர்க்கரை அளவு கூடவோ குறையவோ செய்யும்போது இரவில் தூக்கம் கலைந்து எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஹனி ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். எனவே, சஃப்ரான்-ஹனி டீ அருந்திவிட்டு தூங்கச் சென்றால் நடுவில் எழுந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
குங்குமப் பூ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணம் கொண்டது. கறைகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்க உதவும். தேனில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் குணம் சருமத்தை ஈரப் பசையுடன் வைக்க உதவும். இந்த டீ அருந்திவிட்டு உறங்கச் சென்றால் காலையில் கண் விழிக்கையில் கண்களை கூசச் செய்யும்படி சருமம் மிளிரும்.
இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள பல வகையான ஆரோக்கிய நன்மைகள், இந்த டீயை படுக்கச் செல்வதற்கு முன் அருந்தத்தக்க பெஸ்ட் பானமாக ஆக்கியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
ஒரு கப்பில் குங்குமப்பூவைப் போட்டு அதில் கொதிக்கும் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் சென்ற பின் தேவையான அளவு தேன் சேர்த்தால் சஃப்ரான்-ஹனி டீ தயார். விரும்பினால் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.