புத்த பிக்குகளின் ரகசியங்கள்... இனி நீங்களும் ஆரோக்கியமாக நீண்டக் காலம் வாழலாம்!

Buddhist
Buddhist
Published on

பொதுவாக புத்த மதத்தில் உள்ளவர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்வதையே முதன்மை பணியாக பாவிப்பார்கள். இதுவே அவர்கள் நீண்டக் காலம் வாழ முக்கிய காரணமாகிறது.

மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், மன அழுத்தம், மனச்சோர்வு, அமைதியின்மை ஆகியவை நீங்கும். முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு இதுவே காரணம். அந்தவகையில் புத்த பிக்குகள் பின்பற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

மனதார செய்ய வேண்டும்:

எந்தவொரு வேலை செய்தாலும் மனதார செய்ய வேண்டும். அதாவது நீங்கள் செய்யும் அலுவலக வேலை மட்டுமல்ல, நீங்கள் நடப்பது, சாப்பிடுவது, உட்காருவது என அனைத்தையுமே கவனத்துடனும் மனதாரவும் செய்ய வேண்டும். அப்படி செய்ய உங்களுக்கு உதவுவது, தியானம்தான்.

உணவுமுறை:

மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடம்பின் ஆரோக்கியமும் முக்கியம். ஆகையால், ஆரோக்கிய உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளிலிருந்து நட்ஸ் வரை அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, சாப்பிடும்போது கவனத்துடன் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில் போன் பார்ப்பது டிவி பார்ப்பது போன்ற எந்த செயலும் செய்யக்கூடாது.

இடைவெளி:

இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு இடைவெளி என்றால், ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் உள்ள இடைவெளியை மட்டும் சொல்லவில்லை. வாழ்க்கைக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அலுவலகத்திற்கு செல்பவராக இருந்தால், நடுவில் ஒரு சிறு ட்ரிப் சென்று அந்த வேலைக்கு இடைவெளி கொடுங்கள்.

தியானப் பயிற்சி:

அன்றாடம் யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால், உடல் மற்றும் மனம் என இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மழைக் காலம் நெருங்கிவிட்டது... என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள்!
Buddhist

சீராக வைத்துக்கொள்ளுங்கள்:

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தினமும் சீரான நடைமுறைகளை செய்யுங்கள். அதாவது எப்போது எழுவது, எப்போது சாப்பிடுவது, எப்போது வேலைக்குச் செல்வது, எப்போது வேலைவிட்டு வருவது, எப்போது தூங்குவது என அனைத்தையும் தினமும் ஒரே நேரத்தில் செய்யுங்கள். இதனால், அமைதியாகவும் இருக்க முடியும். வேலை எளிதாகவும் முடியும்.

இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றி வந்தால், ஆரோக்கியமான வாழ்வும் நீண்ட வாழ்வும் எளிதாக கிடைத்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com