உடலுக்கு ஊட்டச்சத்து தரும் எள் தானியம்!

எள்
எள்
Published on

ம் உடல் நலனுக்குத் தேவையான பலவித ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தாவர விதை எள். இந்த, 'எள்' விதையை எவ்வாறெல்லாம் உணவில் பயன்படுத்தி உண்ணலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எள்ளில் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரண்டு வகைகள் உள்ளன. எள்ளில் சுவையான சட்னி செய்து சாப்பிடலாம். சாலட்களின் மேலே எள்ளைத் தூவி சாப்பிடும்போது சாலட்டின் சுவை, மணம் கூடுவதோடு, மொறு மொறுப்புத் தன்மையும் சேர்கிறது. நேபாளியர்கள் இதை அதிகளவில் உணவோடு சேர்த்து சாப்பிடுகின்றனர். முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ், பன், பிரெட் போன்ற பேக்கரி உணவுகள் ஆகியவற்றின் தயாரிப்பில் எள் முக்கிய அங்கம் வகிக்கிறது. வெல்லத்தோடு சேர்த்து எள் உருண்டையாகவும், 'பார்'களாகவும் செய்து சாப்பிடலாம்.

எல் உருண்டை
எல் உருண்டை

எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை (நல்லெண்ணெய்) உபயோகித்து சமைக்கும்போது உணவுக்கு நல்ல மணமும், ஒருவித தனித்துவம் கொண்ட 'நட்டி' சுவையும் கிடைக்கிறது. நல்லெண்ணெயை தலையிலும் உடல் முழுவதும் தேய்த்து எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது உடல் சூடு குறைகிறது.

வெள்ளை எள்ளை சிறிது ஊற வைத்து, மசிய அரைத்து வெண்ணைய்க்குப் பதிலாக பிரட் சாண்ட்விச் மற்றும் டோஸ்ட்களில் தடவி உண்ண, அதிக சக்தி கிடைக்கிறது. சிரியா, லெபனான் போன்ற மிடில் ஈஸ்ட் நாடுகளில் வெள்ளை எள்ளை தோல் நீக்கி, வறுத்து உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து, 'தஹினி' (tahini) என்று அழைக்கப்படும் ஒருவித பேஸ்ட்டாக அரைத்து பாட்டில்களில் அடைத்து வைத்து, ஹம்முஸ் (Hummus) மற்றும் பாபா கநௌஷ் (baba ghanoush) என்றொரு பசியைத் தூண்டும் (appetizer) உணவுகளின் தயாரிப்பில் சுவையூட்டியாகப் பயன்படுத்தி வருகின்றனர். 'தஹினி' (tahini)யை நேரடியாகவும் மற்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். இவ்வாறெல்லாம் பல நன்மைகளோடு, பலவித வழிகளில் உண்ணப்படும் எள்ளை நாமும் அடிக்கடி உணவில் சேர்த்து உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com