அதிர வைக்கும் உடல் பருமன் ஆய்வு எச்சரிக்கை!

Shocking Obesity Study Warning
Shocking Obesity Study Warninghttps://www.hindutamil.in

லக அளவிலான விஞ்ஞானிகளைக் கொண்ட என்.சி.டி. என்ற அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து உடல் பருமன் குறித்து, இந்தியா உள்ளிட்ட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் எடை, உயரத்தை பயன்படுத்தி பாடி மாஸ் இன்டெக்ஸ் கணக்கீடு அடிப்படையில் உடல் பருமன் கணக்கிடப்பட்டு ஆய்வு முடிவுகள் சமீபத்தில் லான்செட் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. இதன் முடிவுகள் பலரையும் அதிர வைத்துள்ளது.

காரணம், 2022ம் ஆண்டு உலகளவில் 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரும் 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 100 கோடி பேருக்கு மேல் உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை 2022ம் ஆண்டில் ஒரு கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கல்லூரி பேராசிரியர் ஒருவர், "உடல் பருமனும் குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்திற்கு கெடுதலானவை. இந்த ஆய்வு கடந்த 33 ஆண்டுகளில் இரு வகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த 1990ம் ஆண்டில் பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், தற்போது பள்ளி செல்லும் சிறுவர்களும் உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பது கவலை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு நம் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வரத் தூண்டும் எச்சரிக்கையாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆம், குழந்தைப் பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வுகள் உணர்த்துகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடல் எடை குறித்த போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க முயல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான சிறந்த 10 பொழுதுபோக்குகள் தெரியுமா?
Shocking Obesity Study Warning

முழுப்பயிறு போன்ற தானிய வகைகள், பல வண்ணங்கள் கொண்ட சத்தான பழங்கள், காய்கறிகள், வீடுகளில் செய்யப்படும் கடலை உருண்டை, எள்ளுருண்டை, புட்டு போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் என பாரம்பரிய சமச்சீர் உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதுடன் பாஸ்ட்புட் கலாசாரத்தைத் தவிர்ப்பதும் உடல் பருமனைத் தவிர்க்கும் வழிகளாகும்.

மேலும், குழந்தைகள் முதல் சுறுசுறுப்பாக ஓடியாடி விளையாடுவதும், தகுந்த உடற்பயிற்சியும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆரோக்கிய வழியாகும். பலவிதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் உடல் பருமனைத் தவிர்க்கும் கடமை அனைவருக்கும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com