நீண்ட கால ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகள்!

Siddha Medicine Tips for Long Term Health
Siddha Medicine Tips for Long Term Healthhttps://tamil.hindustantimes.com

ழங்காலத்தில் பல மருத்துவ முறைகள் சித்தர்களால் உருவாக்கப்பட்டதால், ‘சித்த மருத்துவம்’ என்று பெயர் பெற்றது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இம்முறை வளர்ந்து வந்ததால் சித்த மருத்துவம் உலகிலுள்ள மருத்துவ முறைகளில் மிகவும் பழைமையானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் சித்த மருத்துவம் என்பது மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய மருத்துவ முறை. தமிழ் மாதமான மார்கழியில் ஆயில்யம் நட்சத்தரத்தில் பிறந்த அகத்தியர் என்ற சித்தர்தான் சித்த மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். அவரின் பிறந்த தின தேதியே தேசிய சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. அகத்தியர் சித்த மருத்துவ முறையை அறிமுகப்படுத்தினாலும் அவர் பின் வந்த சித்தர்கள் இம்மருத்துவ முறையைச் செப்பனிட்டு வளர உதவியுள்ளார்கள்.

18 சித்தர்களின் பங்களிப்புதான் சித்த மருத்துவம் வளர காரணமாக இருந்தது. அவர்கள் அகத்தியர், கோரக்கர், கைலாசநாதர், சட்டை முனி, திருமூலர், கூர்ம முனி, கமல முனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், உரோம ரிஷி, பிரம்ம முனி.

சித்த மருத்துவத்திற்கு பின்னரே சீன, கிரேக்க, எகிப்து மருத்துவ முறைகள் தோன்றியது. சித்த மருத்துவத்தில் பயன்படும் மருந்துகள் அனைத்தும் இயற்கையுடன் தொடர்புள்ளது என்பதால் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் தனித்தனியே 96 தத்துவங்கள் உள்ளன. இவற்றை வகைப்படுத்தி ஒருங்கிணைத்து வாதம், பித்தம், கபம் என மூன்று அடிப்படையில் நோய்களைக் கண்டறிந்து மருத்துவம் பார்க்கிறார்கள். இதை கண்டறிய உதவுவதுதான், ‘நாடி’ பார்ப்பது.

சித்த மருத்துவத்தில் நோய்களை குணப்படுத்த மாத்திரை, லேகியம், சூரணம், பஸ்பம், செந்தூரம், தைலம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளை சாப்பிடும்போது பத்திய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதுதான்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இவற்றை தவறாமல் செய்ய சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. உணவை அன்புடன் பறிமாறுங்கள். உண்ணும் உணவை ரசித்து ருசித்து நிதானமாக சாப்பிடுங்கள். பசி எடுத்தால் மட்டுமே உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஒவ்வொரு முறையும் உணவு முழுவதும் உண்ட பின்னர்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

புதிதாக சமைத்த உணவையே உண்ணுங்கள். உணவை சமைத்து 3 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. முதல் நாள் சமைத்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.

பசுவின் பால் மட்டும் சாப்பிடுங்கள், தயிர் உணவுகளை தவிருங்கள். கடைந்த மோர் அதிகம் சாப்பிடுங்கள். ஒரு பங்கு தயிரை 8 பங்கு தண்ணீர் சேர்த்து சாப்பிடுங்கள். குடிக்க ஆறிய வெந்நீரை பயன்படுத்தி வாருங்கள். உருக்கிய நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கருணைக் கிழக்கு தவிர்த்து பூமியின் அடியில் விளையும் கிழங்குகளை தவிருங்கள்.

உணவுக்குப் பின் சிறிது நேரம் உலவுங்கள். குறிப்பாக, இரவு உணவுக்குப் பிறகு காலார நடந்து வாருங்கள். இரவு தூக்கத்தை ஒருபோதும் கெடுக்காதீர்கள். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டு வேறு வேலை செய்யாதீர்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி செய்விக்கும் மருந்துகளை உட்கொண்டு வாந்தி எடுத்து வயிற்றை சுத்தம் செய்யுங்கள். இதனால் வயிற்றில் அமில சுரப்பு சீராகும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்யுங்கள். இதனால் குடல் பாதையில் வளரும் தேவையற்ற புழுக்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றி புதிய என்சைம்கள் உருவாக்க வழி செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
துரியன் பழம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதுவும் பெண்கள்!
Siddha Medicine Tips for Long Term Health

45 நாட்களுக்கு ஒருமுறை மூக்கை  உப்பு நீரில் அல்லது திரவ மருந்துகளை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். இதை மருத்துவர் மேற்பார்வையில் செய்யுங்கள். இதனால் மூச்சு பாதை சுத்தமாகும். ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் குளியல், அதுவும் வெந்நீரில் செய்யுங்கள். உடலில் உண்டாகும் பித்த நோய்களுக்கான சிறந்த தடுப்பு மருந்து எண்ணெய் குளியல் என்கிறது சித்த மருத்துவம். மேலும், எண்ணெய் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள வெப்பம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும், சரும ஆரோக்கியம் காக்கும் என்கிறார்கள்.

தினமும் மூன்று முறை மலம் கழிக்க வேண்டும்,ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com