

பெண்களின் வாழ்க்கை முழுவதும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு, (Women hormone) மாதவிடாய் துவக்கம், கர்ப்பகாலம், மாதவிடாய் நிறைவு வரை அந்தந்த வயதிற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் மாற்றங்களால் பல், ஈறு ஆரோக்கியம் (Gum disease) பாதிக்கப்படும் என்பதை மருத்துவம் தெரிவிக்கிறது.
டீன் ஏஜ் பருவம்
இந்த பருவத்தில் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால் பூப்பர்டி ஜிஞ்சிவைடிஸ் (Gingivitis) எனப்படும் 11 வயது முதல் 14 வயதில் வரும் பருவ ஈறு அழற்சி வரலாம். இதனால் ஈறு சிவப்பாக மாறுதல் எளிதில் ரத்தம் வரக்கூடிய சூழ்நிலை உருவாகும். பற்கள் மற்றும் இடுக்குகளில் தேங்கும் உணவுத்துகள்கள் மீது ஹார்மோன்கள் அதிகப்படியாக செயலாற்றுவதால் 'பிளாக்' எனப்படும் நிரந்தர படிவம் (Dental plaque) உருவாகி ஈறு அழற்சி ஏற்படுகிறது.
கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் ஈறு அழற்சிஅதிகரிக்க கூடும். இதை கற்பகால ஜிஞ்சிவைடிஸ் (Gingivitis) என்று சொல்லப்படுகிறது. சில பெண்களின் ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தாத சிறிய கட்டி போன்ற வளர்ச்சி உருவாகலாம். முறையான பராமரிப்பு, பல் மருத்துவரின் ஆலோசனை மூலம் இதனை சரி செய்ய முடியும். கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.
மாதவிடாய் காலம்
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது தற்காலிகமாக மாதவிடாய் ஜிஞ்சிவைடிஸ் (Gingivitis) ஏற்படலாம் இதில் ஈறு வலி, ரத்தம் வருதல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இது கர்ப்பக் தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்தும் போது ஹார்மோன் மாற்றங்களால் ஈறு அழற்சிஅதிகரிக்கும்.
மெனோபாஸ் ஜிஞ்சிவைடிஸ்
மாதவிடாய் நிற்கும் வயதில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் வாய் உலர்வு, வாய் எரிச்சல், தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கலாம். மேலும் எலும்பு தேய்மானம் காரணமாக பற்களை தாங்கும் எலும்புகள் பாதிக்கப்படலாம். இதனால் பற்கள் தளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அந்த சமயத்தில் பல் இடைவெளிகளை சுத்தம் செய்வது அவசியம். கர்ப்ப காலத்தில் பல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மெனோபாஸ் காலத்தில் வாய் உலர்வை அலட்சியம் செய்வது கூடாது. ஹார்மோன் மாற்றங்கள் இயற்கையானது, அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
பற்களின் ஈறுகள் வீங்குதல், ரத்தம் வடிதல் போன்ற அழற்சி காரணமாக பெண்களுக்கு பல்வேறு வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. எனவே, பெண்கள் அந்தந்த வயதில் பற்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ஈறு வீக்கம், ஈரில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக பல் டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)