உடலில் அதிக ஈஸ்ட்ரோஜன் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்… பெண்கள் ஜாக்கிரதை! 

estrogen
Signs that the body has too much estrogen

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பால் உற்பத்தி செய்யப்படும் ஒரு முக்கிய ஹார்மோன் ஆகும். இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துதல், கருப்பைகளில் முட்டைகளை வளர்த்தல் மற்றும் மார்பகங்கள் இடுப்பு பகுதி போன்ற பெண் பண்புகளை உருவாக்குதல் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கிறது. ஆண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் உள்ளது ஆனால் குறைந்த அளவில். சில சூழ்நிலைகளில் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கலாம். இது Hyperestrogenism என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். 

பாலி சிஸ்டிக் ஓவேரி சென்றோம்: PCOS என்பது ஒரு பொதுவான ஹார்மோன் சமநிலையின்மை ஆகும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ஆண் ஹார்மோன்கள் மற்றும் கருப்பைகளில் பாலிசிஸ்டிக் கருப்பைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. 

மெனோபாஸ்: மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைகிறது. இருப்பினும் சில பெண்களுக்கு அச்சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அதிகமாக இருக்கலாம். 

கருப்பைக் கட்டிகள்: கருப்பை கட்டிகள் இஸ்ரோஜன் உட்பட அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். 

கல்லீரல் நோய்: கல்லீரல், ஈஸ்ட்ரோஜனை உடைக்கும் தன்மை கொண்டது. கல்லீரல் நோய் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் உடலில் அதிகமாக தேங்கி ஹைப்பர் ஈஸ்ட்ரோஜெனிசத்திற்கு வழிவகுக்கும்.

அதிக ஈஸ்ட்ரோஜன் இருப்பதற்கான அறிகுறிகள்: 

  • ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் இல்லாமை.

  • மார்பக வலி, மார்பகங்கள் வீக்கம் அல்லது மார்பகங்களில் கட்டிகள். 

  • யோனி ரத்தப்போக்கு அல்லது அசௌகரியம்.

  • முகப்பரு மற்றும் சரும நிறமாற்றம். 

  • மனச்சோர்வு, எரிச்சல், பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள். 

  • தூக்க பிரச்சனைகள். 

  • தலைவலி. 

  • உடல் எடை அதிகரிப்பு. 

ஒருவேளை ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால், மார்பக வளர்ச்சி, விந்தணு எண்ணிக்கை குறைவு, தசை பலவீனம், எலும்பு அடர்த்தி குறைவு, சோர்வு, மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
Body Language: உடல் மொழியை மேம்படுத்துவதற்கான தந்திரங்கள்! 
estrogen

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஹைப்பர் ஈஸ்ட்ரோஜெனிசத்தின் எந்த ஒரு அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மேலும் எல்லா பெண்களுக்கும் இந்த அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்காது. சில பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். ஹைப்பர் ஈஸ்ட்ரோஜெனிசத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே சரியான காரணத்தை கண்டறிய உரிய மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. 

இதற்கான சிகிச்சையானது உங்களுக்கு என்ன காரணத்தால் இந்த பிரச்சனை உள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் இதற்கான சிகிச்சையானது மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கியது. சரியான உடல் எடை பராமரிப்பு மற்றும் உணவு முறையைப் பின்பற்றினால் இந்த பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com