ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னைக்கு எளிய வீட்டு வைத்தியம்!

hyperpigmentation treatment
hyperpigmentation treatment
Published on

ஹைப்பர்பிக்மென்டேஷன் (Hyperpigmentation) என்பது நம் சருமத்தில் சில இடங்களில் கருமையான திட்டுகள், புள்ளிகள், நிறத்தில் மாற்றம் ஆகியவை  உண்டாவதாகும். நம் சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் என்ற நிறமி அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவதே இதற்கான காரணமாகும். ஹார்மோன் சுரப்பில் மாற்றம், அதிகளவு சூரிய ஒளி உடலில் படுவது, காயங்கள், உட்கொள்ளும் சில வகை மருந்துகள் போன்றவற்றால் மெலனின் உற்பத்தியில் மாற்றம் உண்டாகிறது. சில நேரங்களில் பரம்பரை பரம்பரையாகவும் இது நிகழ வாய்ப்புண்டு. இக்காரணங்கள் சில உதாரணங்களே! ஒவ்வொரு தனி நபருக்கும் இது மாறுபடலாம். இம்மாதிரி பாதிக்கப்பட்ட இடங்களின் ஓரங்கள் சமமின்றி இருக்கக் கூடும். மேலும், அது உலர்ந்த நிலையில் எரிச்சல் உண்டாக்கக் கூடியதாகவும் இருக்கும். சூரிய ஒளியில் அதிக சென்ஸிட்டிவிட்டியுடன் எரிச்சல் தரச் செய்யும்.

இந்தியா, எகிப்து, கிரீஸ், ஜப்பான், சீனா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் நூற்றாண்டு காலமாக பயிரிடப்பட்டு வருவது ஆலு வேரா. இத்தாவரத்தின் உள் பகுதியில் உள்ள சிறிது ஒட்டும் தன்மையுடைய சுத்தமான ஜெல் மருத்துவத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலு வேராவில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல வகை பயோ ஆக்டிவ் கூட்டுப் பொருள்கள் உள்ளன. இவை பல நோய்களை குணப்படுத்த உதவி புரிபவை. ஆலு வேராவில் உள்ள அலோயின் (Aloin) மற்றும் எமோடின் (Emodin) என்ற கூட்டுப் பொருள்கள் மெலனின் நிறமியின் உற்பத்தியை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றன. இதனால் சருமத்தில் நிற மாற்றம் மற்றும் கருந்திட்டுகள் உண்டாவது தடுக்கப்படுகிறது.

மேலும், ஆலு வேரா சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து இதமளிக்கும். இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது சருமத்தில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கவும், நிறத்தில் மாற்றங்கள் உண்டாவதைத் தடுத்து சருமம் சமநிலை பெறவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி விஷுவும் துலா ஸ்நானமும்!
hyperpigmentation treatment

சம அளவு ஆலு வேரா ஜெல் மற்றும் லெமன் ஜூஸ் கலந்து அதை ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ள இடங்களில் மாஸ்க்காக போட்டு 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விட, படிப்படியாக சருமம் பழைய நிலைக்குத் திரும்பும்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஆலு வேரா ஜெல்லுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பாதிப்படைந்த இடங்களில் மாஸ்க்காக போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட, பாதிப்பு குணமடைந்து வரும்.

ஹைப்பர்பிக்மென்டேஷன் உள்ளவர்கள் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கக்கூடிய ஆலு வேரா ஜெல் உபயோகித்து நலம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com