தினசரி ஏற்படும் சிறு சிறு உடல் நலப் பிரச்னைகளுக்கு எளிய வீட்டு வைத்தியம்!

சிறுசிறு உடல் பிரச்னைகள்
சிறுசிறு உடல் பிரச்னைகள்
Published on

சில சந்தர்ப்பங்களில் நம் வீட்டிலிருந்தே நமக்கு ஏற்படும் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம். பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகலாம். இப்படி சில உடல் நலப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தரும் விஷயங்களைப் பார்ப்போம்.

தொண்டை கரகரப்பாக எச்சில் விழுங்கும்போது வலிக்கிறதா? இதற்கு கை வைத்தியமாக சுத்தமான தேன் 1 டீஸ்பூன், எடுத்து விழுங்கவும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கி குரல் சரியாகி விடும். தேனில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி பங்கல் தன்மைகள் தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்றை சரிசெய்து நிவாரணம் தரும்.

திடீரென மூக்கடைத்துக் கொண்டு மூச்சு விட சிரமப்படும்போது கொஞ்சம் சின்ன வெங்காயத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் வாசத்தை சிறிது நேரம் நுகரவும். சைனஸ் தொடர்பான பிரச்னைகளை தடுத்து மூச்சை இயல்பாகக்கும். மூக்கடைப்பை சரிசெய்து இலகுவாக்கும்.

உடல் சோர்வாக, களைப்பாக உணரும்போது உங்கள் காது மடல்களை பிடித்து இலேசாக மசாஜ் செய்யவும். அங்கே உள்ள அழுத்தப் புள்ளிகளை தொட்டு மசாஜ் செய்வதன் மூலமாக உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரித்து உடனடி எனர்ஜியை கொடுக்கும்.

குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் போய் விட்டால் காது அடைத்துக் கொண்டு சிரமம் தரும். இதற்கு பட்ஸ் கொண்டு மெதுவாக தண்ணீர் உறிஞ்சும்படி துடைக்க வேண்டும். ஹேர் டிரையரை ஆன் பண்ணி காதுகளுக்கு சற்றுத் தள்ளி பிடித்துக் கொண்டு சூடான காற்று காதில் படுமாறு பிடித்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்தில் தண்ணீர் ஆவியாகி காது அடைப்பு நீங்கும்.

எதை சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சலாக, எதிர்த்து கொண்டு சாப்பாடு வரும் உணர்வு இருந்தால் இஞ்சி மொரப்பா சாப்பிடலாம். இடது பக்கமாக படுத்துக்கொள்ள பிரச்னை சரியாகும். இளம்சூடான தண்ணீர் அல்லது பால் அருந்திட செரிமானக் கோளாறுகள் இருந்தால் நீங்குவதுடன் நெஞ்செரிச்சலும் குணமாகும்.

தொடர் விக்கல் இருப்பின் தண்ணீரில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை போட்டு குடிக்க விக்கல் நிற்கும். தரையில் அமைதியாக இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க சிறிது நேரத்தில் விக்கல் நிற்கும்.

இதையும் படியுங்கள்:
கண்டிப்பான பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் 9 பாதிப்புகள்!
சிறுசிறு உடல் பிரச்னைகள்

சுளுக்கு ஏற்பட்டு வலி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி தடவி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வீக்கம் ஏற்படாமல் வலியைக் குறைக்கும்.

கடுமையாக தலைவலி ஏற்பட்டால் நொச்சி இலைகளை போட்டு ஆவி பிடிக்கலாம். சுக்கையும், கற்பூரம் சிறிதளவு சேர்த்து உரைத்து பற்று போட தலைவலி சட்டென குறையும்.

எந்தவிதமான பூச்சிக்கடி என்றாலும் கடித்த இடத்தை சுத்தம் செய்து விட்டு சின்ன வெங்காயத்தை அரைத்து பூசினால் கடுகடுப்பு நீங்கும். பின் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

இதுபோன்று வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு அவசர சிகிச்சை செய்து கொண்டு பின் மருத்துவமனை செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com