சைனஸ் பிரச்னைக்கு நிவாரணம் தரும் எளிய வீட்டு வைத்தியம்!

Simple Home Remedies to Relieve Sinus Problems
Simple Home Remedies to Relieve Sinus Problemshttps://www.onlymyhealth.com

சைனஸ் என்பது கன்னம், மூக்கு, நெற்றி, கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள காற்று நிரப்பப்பட்ட பகுதிகள். இப்பகுதிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக மூக்கின் இரு பக்கங்களிலும், கண்ணுக்குக் கீழேயும் வீக்கமும், வலியும் ஏற்படும். இதனால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, வாசனை உணர்வு குறைதல், தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் வலி, வீக்கத்தைப் போகலாம்.

* சுவாசப் பாதைகளை ஈரப்பதமாக்கி அங்குள்ள சளிகளை எளிதில் கரைந்து வெளியே வருவதற்கும், மூக்கடைப்பை எளிதில் குணப்படுத்துவதற்கும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கல்லுப்பு சிறிது, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் இரண்டும் போட்டு ஆவி பிடிக்க மூக்கில் அடைப்பட்டிருந்த சளி விலகி வெளியே வருவதுடன் மூக்கடைப்பும் சரியாகும்.

* அடுப்பில் தோசை கல் அல்லது வாணலி ஒன்றை வைத்து நன்கு சூடானதும் ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்து பொறுக்கும் சூட்டில் மூக்கின் இரண்டு பக்கங்களிலும், நெற்றி பகுதி, காதுக்குப் பின்புறம் என ஒத்தடம் கொடுக்க, வலிக்கு இதமாக இருப்பதுடன் சளியும் இளகி வெளியேறும்.

* ஓமம் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து கையால் நன்கு கசக்கி ஒரு சிறு காட்டன் துணியில் சின்ன மூட்டையாக கட்டி மூக்கில் முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு சரியாகும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலியும் குணமாகும்.

* ஹெர்பல் டீ, சூடான வெந்நீர், சூப் போன்றவற்றை குடிக்க, தொண்டை கரகரப்பு, இருமல் ஆகியவை குணமாவதுடன் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

* சோர்வு, காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றிற்கு கஞ்சி வைத்து மோர் சேர்க்காமல் சிறிது பால், சர்க்கரை கலந்து சூடாகப் பருக குணம் தெரியும்.

இதையும் படியுங்கள்:
நோயாளிகளைப் பார்க்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள் எவை தெரியுமா?
Simple Home Remedies to Relieve Sinus Problems

* சூடான வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயில் சில துளிகள் விட்டு ஆவி பிடிக்க தலைபாரம், மூக்கடைப்பு, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும்.

* எந்த உடல் சீர் கேடுக்கும் ஓய்வு என்பது மிகவும் அவசியம். நம் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்போது தொற்றை எதிர்த்து சமாளிக்கக்கூடிய சக்தியை அது இயற்கையாகவே பெற்று விடுகிறது.

இந்த வகை வைத்தியங்கள் லேசான மற்றும் மிதமான சைனஸ் பிரச்னைக்கு கைகொடுக்கும். நாள்பட்ட சைனஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com