டிஜிட்டல் திரைகளை கவனிக்கும் நாம், இதையும் கொஞ்சம் கவனிச்சுக்கலாமே..

Digital screen
Digital screen
Published on

அன்றாட வாழ்வில் டிஜிட்டல் கேஜெட்களின் திரை ஆதிக்கம் செலுத்துகிறது என்றே சொல்லலாம். லாக்டவுன் காலகட்டத்திற்குப் பிறகு திரையின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஒரு நாளில் அதிகளவு நேரத்தை டிவி, செல்போன், கணினி போன்ற திரைகளில் தான் செலவிடுகிறார்கள். அதிகபடியான திரை நேரத்தால் முதலில் பாதிக்கப்படுவது நமது கண்களே. அவ்வாறு பாதிக்கப்படும் கண்களை பாதுகாக்க உதவும் எளிய முறைகளை பற்றி இந்தப் பதிவில் காணலாம். இந்த முறைகளை வீட்டில் இருக்கும்போது மட்டுமில்லாமல், அலுவலகம் போன்று அதிக நேரம் திரைகளில் கவனம் செலுத்தும் இடங்களிலும் கூட செய்து பார்க்கலாம்.

கண்களை அடிக்கடி கழுவுதல்:

முகம், கை கழுவும்போது அதனுடன் சேர்த்து கண்களையும் கழுவலாம். இதன் மூலம் கண்களில் படிந்துள்ள அழுக்கு, தூசிக்களை நீக்கவும், அதிகளவு திரையை பார்ப்பதனால் ஏற்படும் கண்எரிச்சல் தடுக்கவும் முடியும். வீடுகளில் இருக்கும்போது, சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் ஊறவைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

எளிதான கண் பயிற்சிகள்:

வசதியாக உட்கார்ந்து மெதுவாக உங்கள் கண்களை கடிகாரத்தின் நேர் திசையில் சில வினாடிகளும், கடிகாரத்தின் எதிர் திசையில் சில வினாடிகளுக்கு வட்ட இயக்கத்தில் சுழற்றலாம்.

அடுத்ததாக, ஃபோகஸ் ஷிஃப்டிங் பயிற்சி. உங்கள் மூக்கிலிருந்து 6 அங்குல தூரத்தில் பேனா அல்லது விரலைப் பிடித்து சில வினாடிகள் அதன் முனையில் கவனம் செலுத்தவும். சில வினாடிகளுக்குப் பிறகு உங்கள் கவனத்தை தொலைவில் உள்ளவற்றிற்கு மாற்றவும்.

இந்த நடைமுறையை தலைகீழாகவும் செய்யலாம். அதாவது முதலில் தொலைவில் இருக்கும் பொருளில் கவனத்தை செலுத்தி அதன் பிறகு அருகில் இருக்கும் பொருள்கள் மீது கவனத்தை கொண்டு வரலாம். இந்தப் பயிற்சியை அதிகளவு நேரத்தை திரையில் செலவிடுவதாக உணரும்போது இடை இடையே செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
உடலில் ஏற்படும் மருக்கள்... சாதாரணமாக நினைக்க வேண்டாம்!
Digital screen

பாமிங் (Palming):

கண்களை மூடிக்கொண்டு, உங்கள் உள்ளங்கைளை ஒன்றாக தேய்த்து வெப்பத்தை உருவாக்கி, உடனே கண்களை மூடி அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக கண்களில் தேய்த்து எடுக்க வேண்டும். பின்னர், சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட்டு சில விநாடிகள் அமைதியாக கண்களை மூடி ஓய்வெடுக்கவும். இந்த நுட்பம் கண் அழுத்தத்தைப் போக்கவும், பார்வை நரம்பைத் தளர்த்தவும் உதவுகிறது.

கண் சிமிட்டுதல்:

கண் சிமிட்டுதல் இயற்கையாகவே கண்களை பாதுகாக்க நம் உடலில் நடைபெறும் ஒரு செயல். ஆனால், ஒரு விசயத்தில் நாம் மூழ்கி இருக்கும்போது கண்களை சிமிட்ட நாம் மறந்து விடுகிறோம்; குறிப்பாக திரையில் அதிக நேரம் பயன்படுத்தும்போது. இதைத் தடுக்க, இடைஇடையே கண்களை சில வினாடிகள் வேகமாக சிமிட்டிவும். பின், சில வினாடிகளுக்கு கண்களை மூடி ஓய்வெடுத்துவிட்டு அதன்பிறகு திரையில் கவனத்தை செலுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com