மழைக்கால உடல் வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும் எளிய வழிகள்!

Joint pain relief during monsoon
Joint pain relief during monsoon
Published on

ழை மற்றும் குளிர் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் மூட்டுகளில் வீக்கம், அதோடு வலியும் சேர்த்து பாடாய்படுத்தும். இதுபோன்ற வலி, வீக்கத்தை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே கைவைத்தயமாக குணப்படுத்திக் கொள்ளலாம். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு டேபிள் ஸ்பூன் நொச்சி இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து உணவுக்கு முன் காலையில் சாப்பிட, விரல்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குணமாகும். அதேபோல், வீக்கம் மற்றும் வலியைப் போக்க சீரகமும் நல்ல நிவாரணம் தரும். அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி காலை, மாலை குடித்து வர, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் குறையும்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும் குணம் சீரகத்துக்கு உண்டு. அதனால் உணவோடு சீரகம் சேர்த்து சமைத்து உண்பதால் இரத்த ஓட்ட சீராகி உடலின் வலி, வீக்கம் குறைந்து நல்ல சுகத்தைத் தரும்.

அமுக்ராவும் வலியை குறைக்கும் நிவாரணியாகும். 1 டீஸ்பூன் அமுக்கரா சூரணத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதனுடன் காய்ச்சிய பால், தேன் கலந்து குடித்து வர கை, கால்களில், விரல்களில் ஏற்படும் வலி குறைய ஆரம்பிக்கும். அமுக்கரா சூரணம் உடல் தேற்றியாகவும், காய்ச்சலை தணிக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. இது உடல் வலி மற்றும்  வீக்கத்தைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைப் போக்க விளக்கெண்ணெயை அடி வயிற்றில் பூசி மசாஜ் செய்ய வலி குறையும். லவங்கப் பொடியை உணவில் ரெகுலராக சேர்த்துக்கொள்ள மூட்டு வலி, வீக்கம் குறையும்.

இதையும் படியுங்கள்:
ஜப்பான் நாட்டிலும் வழிபடப்படும் சரஸ்வதி தேவி!
Joint pain relief during monsoon

மேலும், மழைக்காலத்தில் அடிக்கடி உடல் குளிர்ந்து சீதளத் தன்மை ஏற்படும். அச்சமயங்களில் கிராம்பு எண்ணெய், கருவேலம் பட்டை பொடி சேர்த்து கலந்து பல் வலி உள்ள இடத்தில் வைக்க, வலி நன்றாகக் குறைய ஆரம்பிக்கும். அதேபோல், வலி, வீக்கம் உள்ள இடங்களில் மூலிகை எண்ணையைப் பூசி நீவி விட வலி குறையும். பூண்டு, சுக்கு போன்றவை தலைவலிக்கு நல்ல நிவாரணம் தரும்.

இப்படி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் வீக்கத்தை சரி செய்து குணம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com