சீத்தா Vs ராம்சீத்தா உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழம் எது?

Sita Pazham vs Ramar Sita Pazham Benefits.
Sita Pazham vs Ramar Sita Pazham Benefits.Image Credits: YouTube
Published on

சீத்தாப்பழம் மற்றும் ராம்சீத்தாப்பழம் இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மாறுப்பட்டு காணப்படுகின்றன. அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சீத்தாப்பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில், கோன் வடிவத்தில் உள்ளே இனிப்பான சதைகளைக் கொண்டு இருக்கும் பழமாகும். இந்தப் பழத்தை ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. சீத்தாப்பழத்தில் அதிகமாக வைட்டமின் B6 உள்ளது. இந்த வைட்டமினின் குறைப்பாட்டால்தான் ஒழுங்கற்ற மனநிலை உருவாகும். இந்தப் பழம் சாப்பிடுவதால், மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

சீத்தாப்பழத்தில் கண்களுக்குத் தேவையான lutein என்னும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. சீத்தாப்பழத்தில் அதிகமாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை குறைக்க  உதவுகின்றன. இந்தப் பழத்தில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.

சீத்தாப்பழத்திற்கு கேன்சரை போக்கக்கூடிய தன்மையுள்ளது. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கேன்சர் உருவாக்கும் செல் வளர்ச்சியை தடுக்கிறது. இந்தப் பழத்தை சாப்பிடுவதால் அழற்சி நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சீத்தாப்பழம் எண்ணற்ற  நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பழம் பார்ப்பதற்கு சீத்தாப்பழத்தை போலவே இருக்கும். அதே குடும்பத்தைச் சேர்ந்த இப்பழத்தை 'bullock's heart' என்றும் கூறுவார்கள். லேசான சிவப்பு நிறத்தில் மென்மையான தோல்களைக் கொண்டிருக்கும் இப்பழம் அசாம், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்ட்ரா ஆகிய இடங்களில் அதிகமாகக் கிடைக்கிறது. உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ராம்சீத்தாப்பழத்தை தினமும் உண்டுவந்தால், உடல் எடை படிப்படியாக குறையும். இப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கிறது.

இந்தப் பழத்தில் இருக்கும் ஒருவகை element சர்க்கரையின் அளவை இரத்தத்தில் இருந்து குறைக்கக்கூடிய தன்மையைக் கொண்டது. ராம்சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. வைட்டமின் B6 அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் கொழுப்பை அதிகமாக சேர விடாமல் இதயத்தைக் காக்கிறது. அது மட்டுமில்லாமல், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?
Sita Pazham vs Ramar Sita Pazham Benefits.

இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி கொட்டுவதும், சருமத்தில் ஏற்படும் Acne பிரச்னைகளும் குணமாகும். இப்பழத்தில் அதிகமாக வைட்டமின் சி இருப்பதால் முகத்தை பளபளப்பாக்குகிறது. இந்த இரண்டு பழங்களிலுமே எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சுவையிலும் இரண்டு பழங்களும் ஒரே மாதிரியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com