இது ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது. குறிப்பாக epigallocatechin gallate என்ற ஆன்டி ஆக்சிடண்ட் ஃப்ரீ ராடிகல் சேதத்தைத் தடுக்கும். இது வயதாவதைத் தடுத்து எப்போதும் இளமையுடன் இருக்க வைக்கும்.
இதில் அழற்சி எதிர்ப்புப் பண்பு உள்ளது. காஃபீன் இல்லாதது. இதன் ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் நார்சத்து செரிமானத்தை சீராக்கி சருமத்தை பளபளப்பாக்குகிறது. வறுத்த பார்லியை நீரில் கொதிக்க வைத்து ஃப்ரிட்ஜ் ஜில் குளிர வைத்து உட்கொள்வது சிறந்தது. மிக ஆரோக்கியமானது.
சிட்ரஸ் வகையைச் சார்ந்த யூஜா பழத்தையும் தேனும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி சத்து மற்றும் ஃப்ளேவினாய்டுகள் உள்ளன. இது சருமத்தில் பளபளப்பு மற்றும் கொலாஜனை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பையும் மேம்படுத்துகிறது.
இது புளிக்க வைத்த பார்லி மற்றும் சமைத்த அரிசி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது ப்ரோபயாடிக்குகள் நிறைந்தது. இது செரிமானத்தை சீராக்கி, சருமத்தை நீரேற்றமாக வைக்கிறது. கொரிய உணவகங்களில் கிடைக்கக் கூடியது.
கருப்பு சோயா வில் ஐசோஃப்ளேவின், வைட்டமின் ஈ சத்து மற்றும் ஆன்தோசயானின்கள் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் போக்கி இளமையை தக்க வைக்கிறது. முடி ஆரோக்கியம் அதிகரித்து மற்றும் ஹார்மோன்களை சமச்சீராக வைக்கிறது.
பச்சை கொரிய ப்ளம் பழத்தை measil என்று கூறுவார்கள். இதில் உள்ள ஆர்கானிக் அமிலங்கள் அழற்சியை தடுத்து உடல் நச்சுக்களை நீக்குகிறது. இதனால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.