ஜீரண மண்டல உறுப்புகளைக் குளிர்விக்கும் ஆறு  வகை பானங்கள்!

ஜீரண மண்டல உறுப்புகளைக் குளிர்விக்கும் ஆறு  வகை பானங்கள்!
https://tamil.boldsky.com

கோடையின் வெப்பத்திலிருந்து நம் உடலையும் உள்ளுறுப்புகளையும் காத்துக்கொள்ள பலவிதமான வழிமுறைகளை நாம் கையாள்கிறோம். நாம் உண்ணும் உணவு நல்ல முறையில் செரிமானமாகி சக்தியாக மாறி உடலுக்குள் உறிஞ்சப்படுவது வரையிலான சிறப்பான பணியை நம் ஜீரண மண்டல உறுப்புகள் செய்து வருகின்றன. அவ்வுறுப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஆறு வகை பானங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ஜீரண மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களான ப்ரோபயோடிக்ஸ் அதிகம் நிறைந்துள்ளது கோம்புச்சா டீ. இது நொதித்து வந்த நுரையுடன் இனிப்பு அல்லது லேசான கசப்பு சுவை கொண்டது.

* எலுமிச்சம் பழமும் இஞ்சியும் நல்ல செரிமானத்துக்கு உதவக்கூடியவை. இவை இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து ஐஸ் க்யூப் சேர்த்து அருந்துவது இரைப்பை ஆரோக்கியத்தைக் காக்கவும் சீரான செரிமானத்துக்கும் உதவும்.

* இளநீரில் ப்ரீபயோட்டிக்ஸ் அதிகம் உள்ளன. இவை ஜீரண மண்டலத்திலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுபவை. கோடை வெப்பத்தினால் வியர்வை மூலம் உண்டாகும் நீரிழப்பை இளநீர் அருந்துவதன் மூலம் இட்டு நிரப்ப முடியும். மேலும் இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் இழந்த சக்தியையும் மீட்டுத் தரும்.

இதையும் படியுங்கள்:
மாமியார் - மருமகள் இடையே உற்சாகம் தரும் 3 உந்து சக்திகள்!
ஜீரண மண்டல உறுப்புகளைக் குளிர்விக்கும் ஆறு  வகை பானங்கள்!

* நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த மற்றொரு பானம் வாட்டர் கெஃபிர் (Water Kefir). பாலை உபயோகித்துத் தயாரிக்கப்படும் வழக்கமான கெஃபிருக்குப் பதில் இது தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படுவது. இதில் பெரி மற்றும் சிட்ரஸ் வகைப் பழத்துண்டுகளைச் சேர்த்து உண்ணும்போது சுவையும் ஆரோக்கியமும் கூடும்.

* க்ரீன் ஸ்மூத்தியுடன் ஒரு டீஸ்பூன் யோகர்ட் அல்லது கெஃபிர் சேர்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி தரும் நல்ல பானம் கிடைக்கிறது. ஸ்மூத்தியிலுள்ள பச்சை இலைகள் மற்றும் பழங்கள் நல்ல முறையிலான செரிமானத்துக்கு உதவும். யோகர்ட் அல்லது கெஃபிரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் ஜீரண மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன.

* ஆலுவேரா ஜூஸ் காயங்களை ஆற்றுப்படுத்தி குணமாக்கக்கூடிய திறமை கொண்டது. இத்துடன் தேன் மற்றும் எலுமிச்சம் பழ ஜூஸ் சேர்த்து அருந்தும்போது அது ஒரு மிருதுவான டானிக் போல் செயல் புரிந்து உடல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

மேலே கூறிய ஆரோக்கிய பானங்களை அடிக்கடி உட்கொண்டு நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com