குடைமிளகாயில் இத்தனை நன்மைகளா?

So many benefits of Capsicum
So many benefits of Capsicumhttps://tamil.boldsky.com

குடைமிளகாய் என்றதுமே பலருக்கும், ‘இதில் காரம் அதிகம் இருக்குமோ’ என எண்ணத் தோன்றும். குடைமிளகாயின் கண்ணைக் கவரும் வண்ணம், பலரையும் சாப்பிடத் தூண்டுவதுடன், பல ஆரோக்கிய சத்துக்களையும் உடலுக்குக் கொடுக்கவல்லது.

குடைமிளகாய், ‘ட்ரை க்ளிசரைட்’ எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, கலோரி எரிப்பைத் தூண்டி, வளர்சிதை மாற்றம் மற்றும் இயக்கத்தை சீராக்கும் குணம் கொண்டது. இது குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டது என்பதால் உடல் எடை குறைப்புக்கும் உதவக்கூடியது.

பீட்டா கரோட்டின், ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் வைட்டமின் சி ஆகிய ஆன்டி ஆக்ஸிடென்ட்களை  குடைமிளகாயில் அடங்கி இருப்பதால் திசுக்கள், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்து இதய நோய்கள், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், ஆஸ்துமா, கேடராக்ட், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

குடைமிளகாயில் கேப்சைசின் என்ற கெமிக்கல் உண்டு. வாயினுள் எரிச்சலை ஏற்படுத்தும் இதற்கு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலிகளையும் இது குறைக்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்த குடைமிளகாய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டக்கூடியது.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணம் தரும் பாகற்காய்!
So many benefits of Capsicum

ஆண்களுக்கு ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துவதால் குடைமிளகாய் இதய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கக்கூடியது. செரிமான நீர் சுரப்பைத் தூண்டி, செரிமானத்தை சீராக்கவல்லது.

இப்படிப் பல நன்மைகள் தரும் குடைமிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியம் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com