மண்பானை குடிநீரில் இத்தனை நன்மைகளா?

so many benefits of earthen pot water?
so many benefits of earthen pot water?
Published on

கோடைக்காலம் தொடங்கி, அக்னி நட்சத்திரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நம் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கோடையில் உயிர்நாடியாக இருப்பது தண்ணீர்தான்.

தண்ணீரை நாம் பில்டர் செய்கிறோம் என்ற பெயரில் பல நவீன முறைகளை கையாண்டாலும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது மண்பானை குடிநீர். மண்பானையில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா? முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நம் ஆரோக்கியத்தோடு இணைத்தே நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

தண்ணீரை சுத்தம் செய்ய இன்று ஆயிரம் மிஷின்கள் வந்திருக்கலாம். ஆனால், நமக்கு முன்னோர்கள் அளித்த மண்பானையை ஆரோக்கியமான மிஷன் என்று சொன்னால் அது மிகையாகாது. 100 ரூபாய் முதல் 200 ரூபாய்தான் வரும் ஒரு மண் பானையின் விலை. அதைப் பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை கீழ்க்கண்ட பதிவை படித்த உடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வாட்டர் பில்டர்.’ பொதுவாக, நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

களிமண் பானையில் தண்ணீர் நிரப்பிக் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும், இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் தேன் போன்ற இனிமையான சுவை இருக்கும். இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும். புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவதின் மகிமையை தெரிந்துகொள்ளுங்கள்!
so many benefits of earthen pot water?

கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத் தடுக்க மண் பானை நீர்  சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துக்கள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி, தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும். மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும்போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண்பானை நீர் எந்த பக்கவிளைவுகளும் அற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.

வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போதுதான் நீர் குளிர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

உங்கள் வீட்டின் அருகில் மண்பானைகள் விற்பனை செய்கிறார்களா என அறிந்து உடனே மண்பானை வாங்கி அதில் தண்ணீர் ஊற்றிவைத்து குடித்து உடல் நலம் காத்திடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com