எலுமிச்சை சாறில் இத்தனை நன்மைகளா?

Benefits of lemon juice.
Benefits of lemon juice.

நீங்கள் உங்கள் உடல் நலனைப் பேண குறைந்த செலவில் அதிக நன்மைகள் பெற வேண்டுமா? தினசரி எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். தினசரி லெமன் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறைவது முதல், இளமையான தோற்றம் பெறுவது வரை அதிக நன்மைகள் அதில் உள்ளன.

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சை ஜூஸ் காலையில் குடிப்பதற்கு சிறந்த பானமாகும். செரிமான மண்டலத்துக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், மலச்சிக்கலை நீக்குவதற்கும் எலுமிச்சை ஜூஸ் உதவுகிறது.

ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸில் சுமார் 20 முதல் 25 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளும் அதிக அளவு மருத்துவ குணங்களும் உள்ளன. எலுமிச்சை ஜூஸில் குறிப்பிட்ட அளவு இரும்புச் சத்தும், விட்டமின் ஏ சத்தும் இருப்பதால் பல நோய்களுக்கு இது மருந்தாகிறது.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  1. எலுமிச்சை ஜூஸ் ஆன்ட்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

  2. இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

  3. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்று அபாயங்களைக் குறைக்கிறது.

  4. உடலின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.

  5. தினசரி ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

  6. எலுமிச்சை ஜூஸில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு நல்லது.

  7. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

  8. சளித் தொந்தரவு உள்ளவர்களும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

  9. வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தருகிறது எலுமிச்சை பழச்சாறு.

  10. இது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

  11. உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுப்பதில் எலுமிச்சை பழச்சாறு நல்ல பங்காற்றுகிறது.

  12. கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இது உதவுகிறது.

  13. செரிமான நொதிகளின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.

  14. முகப்பருக்கள், முகச் சுருக்கங்கள் போன்ற சருமப் பிரச்னைகளைத் தீர்க்கிறது.

  15. இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கிறது.

இதுபோன்ற நன்மைகள் அனைத்தையும் பெற தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூசை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சுத்திகரிக்கும் மற்றும் நோயை குணப்படுத்தும் பண்புகள் நம்முடைய ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com