சிறுதானிய பாலில் இத்தனை ஆரோக்கிய குணங்களா?

So many health benefits in small grain milk?
So many health benefits in small grain milk?https://www.facebook.com

ப்போதெல்லாம் சிறு தானியங்கள் குறித்து  மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் நிறைந்த இவற்றில் க்ளூட்டன் இல்லாததால் உடலுக்குச் சிறந்தது. பசும்பால் மற்றும் லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு மாற்றாக சிறுதானியம் விளங்குகிறது. சிறு தானியங்களை ஊறவைத்து பின்பு பால் பிழிந்து அதை வடிகட்டினால் உடலுக்க ஆரோக்கியம் தரும் பால் கிடைக்கும். அதுபோன்ற சில ஆரோக்கிய பால் வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.

ராகி: ராகியை முதல் நாள் இரவு ஊற வைத்தோ அல்லது முளை கட்டிய பிறகோ பால் எடுக்கலாம். இது பசும்பாலுக்கு சிறந்த மாற்று உணவாகும். கால்சியம், இரும்பு சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்  மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்தது ராகி பால்.

கம்பு: கம்பு தானியத்தில்  இருந்தும் பால் எடுக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள்  மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது. கால்சியமும், புரதமும் அதிக அளவில் உள்ள இதை உட்கொண்டால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

பனி வரகு: பனி வரகிலிருந்து எடுக்கப் படும் பாலில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இதைக்கொண்டு பானம் தயாரிக்க, ஜீரண சக்திக்கு மிகச் சிறந்த ஒன்றாகும். ஐஸ் க்ரீம் மற்றும் புட்டு தயாரிக்க இது உபயோகப்படுத்தப்படுகிறது. மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.

திணைப் பால்: திணையில் இருந்து தயாரிக்கப் படும் இது, ‘இத்தாலி மில்லட்’ என்றும் அழைக்கப் படுகிறது. இதில் மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளன.

குலசாமை பால்: குலசாமை சிறுதானியங்களில் இருந்து எடுக்கப்படும் பால் சத்து நிறைந்தது. இதை இந்தியாவில், ‘கொர்ரா’ என்று கூறுவார்கள். இது அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது.

மேற்கூறிய சிறுதானிய பால் வகைகள் எலும்பு ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் அனைத்திற்கும் மிகச் சிறந்தது. நார்ச்சத்து நிறைந்த இந்த சிறுதானிய பால் வகைகள் மலச்சிக்கலைத் நீக்கி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இப்பால் வகைகளில் குறைந்த கலோரிகளே உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதால் அதிக அளவு உண்பதை தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
‘நைட் ஷேட்ஸ்’ பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடலுக்கு நன்மையா? தீமையா?
So many health benefits in small grain milk?

எந்தவித சிறுதானியங்களில் இருந்து பால் எடுப்பதாக இருந்தாலும் கீழ்க்கண்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

சிறு தானியங்களை சுமார் 6 மணி முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்டிய பிறகும் நன்றாக அலச வேண்டும். ஊற வைத்ததை நன்கு மையாக அரைக்க வேண்டும். பிறகு இதை நன்றாக வடிகட்ட வேண்டும். உங்களுக்குப் பிடித்த இனிப்பு சேர்த்து அருந்தலாம்.

இந்தப் பாலின் நன்மைகள்: இதில் லாக்டோஸ் இல்லாததால் லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஏற்றது. செரிமானத்திற்கு நல்லது. கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி சத்து நிறைந்தது. இதில் கொழுப்பு இல்லாததால் எடை குறைப்புக்கு நல்லது. க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com