அற்புதப் பலன் தரும் ஆமணக்கு எண்ணெய்யில் இத்தனை ஆரோக்கியமா?

So many health benefits of castor oil?
So many health benefits of castor oil?
Published on

மணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கியமான வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் கொட்டைகளின் அளவைப் பொறுத்தது.

சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள கொட்டையும் கொண்டது. இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவப் பயன் ஒன்றுதான். ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருத்துவப் பொருளாகப் பயன் தருகின்றன. உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு துளியை கண்களில் விட நல்ல குணம் கிடைக்கும்.

பொதுவாக, ஆமணக்கு எண்ணெய் வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாய்வுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெற இது உதவுகின்றது.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்ய, மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

ஆமணக்கு இலை, வாத நோய்களுக்குச் சிறப்பான மருந்தாகப் பயன்படுகிறது. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம் மற்றும் வலிக்கு ஒத்தடம் கொடுக்க, வலி நீங்கும்; வீக்கமும் வடியும்.

இதையும் படியுங்கள்:
பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!
So many health benefits of castor oil?

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் இரண்டு பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும். மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டு வர விரைவில் குணம் காணலாம்.

மேற்கண்ட சிகிச்சை முறைகளை எல்லாம் தகுந்த இயற்கை மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com