ஊற வைத்த கொத்தமல்லி விதையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

Coriander water
Coriander water
Published on

ம் சமையலறையில் உள்ள பெரும்பாலான உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. அதில் கொத்தமல்லியும் ஒன்று. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, கே,  சி, ஈ ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், கொத்தமல்லியில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. கொத்தமல்லியை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சருமப் பிரச்னை: கொத்தமல்லியில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் சருமம் தொடர்பான பல பிரச்னைகள் குணமாகும். மேலும் கொத்தமல்லி நீர் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது. இது பல நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும், இது வைரஸ் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

தலை முடி: கொத்தமல்லி விதையில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் முடி வலுவாகவும், வேகமாகவும் வளர உதவி செய்கின்றன. கொத்தமல்லி விதை தண்ணீரை காலையில் குடிப்பதால் முடி உதிர்தல் மற்றும் உடைவது குறையும். கொத்தமல்லி விதைகளை எண்ணெய் வடிவிலும் தலைமுடிக்குத் தடவலாம்.

எடை குறைக்க உதவும்: கொத்தமல்லி செரிமான பிரச்னைகளுக்கு நல்லது. தினமும் காலையில் கொத்தமல்லி விதையில் ஊறவைத்த தண்ணீரை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும். கொத்தமல்லி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

கொலஸ்ட்ராலை நீக்கும்: கொத்தமல்லி விதையில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும் சில பண்புகள் உள்ளதால், கொத்தமல்லி தண்ணீரை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

வயிற்று ஆரோக்கியம்: கொத்தமல்லி தண்ணீரில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை தீர்த்து மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பாரதப் போரில் துரியோதனனின் உயிர் பிரியாமல் இருந்ததற்கான காரணம் தெரியுமா?
Coriander water

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கொத்தமல்லி தண்ணீர் குடிக்கலாம். கொத்தமல்லி விதை தண்ணீரைக் குடிப்பதால் இரத்த இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

மாதவிடாய் வலிக்கு: மாதவிடாய் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பது நன்மை பயக்கும்.

முகப்பரு பிரச்னைக்கு: கொத்தமல்லியில் உள்ள இரும்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராடி, முகத்தை பளபளக்க உதவுகிறது.

கொத்தமல்லி தண்ணீரை தயாரிப்பது எப்படி?

கொத்தமல்லி தண்ணீரை தயாரிக்க 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி, அதன் பிறகு இந்த தண்ணீரை குடிக்கலாம். சுவைக்காக சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com