வெள்ளரி விதையில் இத்தனை ஆரோக்கிய சத்துக்களா?

வெள்ளரி விதை
வெள்ளரி விதை
Published on

வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. இது சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.

வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பைப் போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. சிறுநீர் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

உடல் எடையை இயற்கையாகவே குறைக்க வெள்ளரி விதைகள் கைக்கொடுக்கிறது. வெள்ளரி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் தாராளமாக உடல் எடையை குறைக்க வெள்ளரி விதைகளை உட்கொள்ளலாம்.

வெள்ளரி விதையில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான தாதுக்கள் உள்ளன. தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் கண்டிப்பாக வெள்ளரி விதைகளை சாப்பிட வேண்டும். வெள்ளரி விதைகள் கந்தகத்தின் மூலமாகும். கந்தகத்தின் நல்ல அளவு முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் கண்டிப்பாக வெள்ளரி விதைகளை சாப்பிட வேண்டும்.

வெள்ளரி விதைகள் வறண்ட சருமம், சுருக்கங்கள் போன்ற பல பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விதைகளின் பயன்பாடு சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துயிர் பெறச் செய்து, இயற்கையான பொலிவைச் சேர்க்கிறது.

இதையும் படியுங்கள்:
உணவுக்குப் பின் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 பயன்கள் தெரியுமா?
வெள்ளரி விதை

வெள்ளரி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. வெள்ளரி விதைகளை வழக்கமாக உட்கொள்வது தலைவலி பிரச்னைக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காய் விதைகளில் உள்ள தாமிரச் சத்து நரம்பியக்கடத்தல் செயல்முறையைத் தூண்ட உதவுகிறது. இது ஒட்டுமொத்த மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குவதால் வெள்ளரி விதைகளை தவறாமல் உட்கொள்வது நல்லது.

வெள்ளரி விதைகளை வழக்கமாக உட்கொள்வது ஒட்டுமொத்த ஈறு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வெள்ளரி விதையில் உள்ள போட்டோ கெமிக்கல் உள்ளடக்கம் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் குழிவுகள் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது. வெள்ளரி விதைகள் உமிழ்நீர் செயல்முறையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com