கொரிய மக்கள் விரும்பி உண்ணும் பாஞ்சனில் அப்படி என்னதான் இருக்கிறது?

So what's in Korean food banchan?
So what's in Korean food banchan?https://asianinspirations.com
Published on

பாஞ்சன் (Banchan) என்பது கொரிய மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் சைட் டிஷ்கள் ஆகும். சமைத்த சாதத்துடன் இந்த சைட் டிஷ் கலந்து உண்கிறார்கள். பாஞ்சன் பலவித வடிவங்களில் பலவிதமான சுவைகளில் கண்கவர் வண்ணங்களில் இருக்கும்.

1. கிம்ச்சி: கிம்ச்சி என்பது ஒரு பாரம்பரிய கொரிய உணவாகும். இது காய்கறிகளின் நொதித்தல் செயல்முறையை குறிக்கிறது. நாபா முட்டைக்கோஸ் மற்றும் கொரிய முள்ளங்கி, மிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்காலியன்ஸ் மற்றும் காரம் போன்ற பல்வேறு சுவையூட்டல்களுடன் தயாரிக்கப்படுகிறது. மசாலா பேஸ்ட்டைச் சேர்த்த பின்னர், கலவையை நொதிக்க விட்டு, இயற்கையான நொதித்தல் செயல்முறை நடைபெற அனுமதிக்கிறது. இதன் விளைவாக, ஒரு தனித்துவமான சுவையுடன் கசப்பான, காரமான மற்றும் சுவையான உணவு கிடைக்கும்.

2. நமுல்: இது தாளிக்கப்பட்ட மற்றும் வதக்கிய காய்கறிகளை குறிக்கிறது. இவர்கள் பெரும்பாலும் எள் எண்ணெயை உபயோகிக்கிறார்கள். முளைகட்டிய பீன்ஸ் மற்றும் பூண்டு கீரையுடன் காய்கறிகளை சேர்த்து தாளித்து வதக்கி உண்கிறார்கள்.

3. ஜாப்ஸி: ஜாப்ஸி என்பது வறுத்த கண்ணாடி நூடுல்ஸை குறிக்கும். கண்ணாடி நூடுல்ஸ் என்பது சர்க்கரை வள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச், காய்கறிகள் மற்றும் மாட்டிறைச்சி அல்லது பிற வகையான புரதங்களுடன் சேர்த்து கலக்கப்படுவதுதான் கண்ணாடி நூடுல்ஸ். இதுவே ஜாப்ஸி என்று அழைக்கப்படுகிறது.

4. ஓய் முச்சிம்: இது வெள்ளரிக்காயை அழகாக நறுக்கி சாலட் போல செய்து தேவையான அளவு உப்பு, காரம், மிளகுத்தூள் சேர்த்து பரிமாறப்படும் சாலட்.

5.கொங்கனமுல்: இது பதப்படுத்தப்பட்டு முளைக்கட்டிய சோயாபீன்ஸ்.

6. ஜியோன்: ஜியோ என்பது கொரியன் ஸ்பெஷல் பான் கேக் ஆகும். இதனுடன் பல்வேறு வகையான காய்கறிகள் கடல் உணவுகள் அல்லது இறைச்சி போன்ற பொருட்கள் கலந்திருக்கும்.

7. முள்ளங்கி கிம்ச்சி: முள்ளங்கிகளை கியூப் வடிவத்தில் அழகாக வெட்டி அவற்றை புளிக்க வைத்து பாரம்பரிய கிம்ச்சி போன்ற மசாலா பொருட்களுடன் புளிக்க வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆல்ஃபா ஆணின் 6 விசேஷ திறன்கள் தெரியுமா?
So what's in Korean food banchan?

பாஞ்சன் எனப்படும் ஒரே நேர உணவில் பலவிதமான சுவைகளில் மற்றும் வடிவங்களில் பல்வேறு வகையான சைடு டிஷ்களை கலந்து கொரிய மக்கள் உண்கிறார்கள். அவர்கள் ஒன்றாக குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் அமர்ந்து உண்ணும்போது பலவிதமான சைட் டிஷ்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்கிறார்கள். இந்த பாஞ்சன் எண்ணிக்கை மற்றும் வகைகள் ஒவ்வொரு குடும்பம் அல்லது குழுக்களுக்குள் வேறுபடும்.

பாஞ்சன் உணவின் நன்மைகள்: கொரியர்களின் விருப்ப உணவான பாஞ்சன் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கிம்ச்சி போன்ற பாஞ்சனில் பயன்படுத்தப்படும் நொதித்தல் செயல்முறை உணவுக்கு நன்மை பயக்கும் ப்ரோபயாடிக்குகளை அளிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை செய்யும். இதனால் மக்கள் அவற்றை விரும்பி உண்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com