நம் உடலினுள் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது எந்த நேரமும் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான நோய்கள் வருவதற்கான காரணியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு நாம் செய்ய வேண்டியது LDL அளவை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிசம், சீஸ் போன்ற உணவுகளின் அளவைக் குறைத்து வைட்டமின் சத்துக்கள் மற்றும் நார்ச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் கீரை வகைகளை உணவுடன் சேர்த்துக்கொள்வதேயாகும். பச்சை நிறம் கொண்ட சில வகைப் பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க நன்கு உதவி புரியும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
* அவகாடோ பழம் அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தது. இதிலுள்ள மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பானது LDL அளவை குறைக்க உதவும்.
* கிவி சின்ன சைஸ் பழமாயிருந்தாலும் அதில் வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.
* பச்சை நிற ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் சக்தி கொண்டது.
* பச்சை நிற கிரேப் பழங்களும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் குணம் கொண்டது.
* க்ரீன் நிற பியர்ஸ்ஸில் டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவையும் LDL அளவை குறைக்கும் பணியில் பெறும் பங்களிப்பவை.
* மெலன் பழங்கள் குறைந்த கலோரி அளவு கொண்டதாயிருந்தாலும் அவற்றில் வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
* க்ரீன் பிளம்ஸ்களில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
மேற்கூறிய பழங்களை அடிக்கடி உட்கொண்டு கெட்ட கொலஸ்ட்ராலினால் ஏற்படும் அபாயகரமான நோய்களின் வரவைத் தடுத்து ஆனந்த வாழ்வு பெறுவோம்.