புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சில ஆரோக்கிய உணவுகள்!

Foods that fight cancer
Foods that fight cancer
Published on

லகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பெரிய நோயாக புற்றுநோய் இருப்பது அதிர்ச்சியோடு, கவலையும் தருகிறது. புற்றுநோய்  நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும்  மனரீதியாக பெருமளவில் பாதிக்கும்.

சருமப் புற்றுநோய் முதல் புரோஸ்டேட், கருப்பை, மார்பகம், வயிறு, பெருங்குடல், வாய், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும்  கடினமான காலங்களில் ஒன்றாக மாறுகிறது.

இருப்பினும், துணிவுடன்  புற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வரும் வாய்ப்பும் உள்ளது. மருத்துவ ஆலோசனைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி தவிர, நோயாளிகள் புற்றுநோயை எதிர்த்துப் போராட தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக்கூடியவற்றில் முதன்மை விஷயமாகிறது உணவுக்கட்டுப்பாடு.

ஆரோக்கியமான உணவு புற்றுநோயிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்கிறது  ஆராய்ச்சிகள். புற்றுநோய்க்கு மட்டுமல்ல, பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் ஆரோக்கியமான உணவு ஒரு முக்கியமான ஆயுதம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதன்படி புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சில உணவுகள் குறித்துக் காண்போம்.

முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் கடுகு கீரைகள் ஆகிய பிராசிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளில் பல்வேறு கரோட்டினாய்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் ஃபோலேட் போன்றவை இந்நோயை எதிர்க்கும் பண்புள்ளவை.

கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் அதிக வேதியியல் தடுப்புக் கலவைகள் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்களுடன் அதன் கிளைகோலிப்பிட் பின்னங்கள் புற்றுநோய் செல் பெருக்கத்தைத் தடுக்கின்றன. ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோயெதிர்ப்பு பண்புகளையும் கொண்டு விரைவாக பெருகும் திசுக்களை கட்டுப்படுத்தும்.

அன்றாடம் பயன்படுத்தும் மருத்துவ குணமிக்க  பூண்டின் பல்வேறு நன்மை பயக்கும் மருந்தியல் விளைவுகளில், அதன் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாடும் ஆய்வு செய்யப்பட்டு பூண்டை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்திலிருந்து சக்தி வாய்ந்த பாதுகாப்பை வழங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அரங்கன் கோயிலின் 6 அதிசய மர்மங்கள்!
Foods that fight cancer

அடுத்து, தக்காளி. இதன் சிவப்பு நிறத்திற்கு காரணமான லைகோபீன் (ஒரு வகை கரோட்டினாய்டு) அதிக அளவில் உள்ளது. லைகோபீன் புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அன்றாட உணவுகளில் கேரட், பீன்ஸ் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கும். கேரட்  வயிறு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான  எதிர்ப்பைத் தருகிறது. அதேபோல், பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மனித மற்றும் விலங்கு மீதான ஆய்வுகள் பீன்ஸ் அதிகமாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பதை கண்டறிந்துள்ளது.

மேலும், இலவங்கம், பட்டை, அக்ரூட் போன்ற கொட்டைகள், ஆலிவ் எண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குர்குமின் உள்ள மஞ்சள், சிட்ரஸ் பழங்கள், கொழுப்பு நிறைந்த மீன், காளான்கள், வெண்ணெய், பருப்பு வகைகள், இஞ்சி, சூரியகாந்தி, ஆளி, எள் மற்றும் பூசணி விதைகள், கிரீன் டீ போன்ற உணவுகளும் புற்றுநோய் அபாயத்தை எதிர்த்துப் போராட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்த உணவுகள் எடுக்கும் முன்பு புற்றுநோய் நிபுணரின் பரிந்துரையும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com