குறட்டையை அசால்டாக நிறுத்த உதவும் சில சிம்பிள் டிப்ஸ்!

Snore
Snore
Published on

தூக்கம் என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் குறட்டை பிரச்சினை பலரது தூக்கத்தையும், அவர்களுக்கு அருகில் படுப்பவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். குறட்டை என்பது ஒருவர் தூங்கும் நிலை மற்றும் தீவிரமான உடல்நல பிரச்சனைகள் காரணமாக ஏற்படலாம். இது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், இதற்கு பல எளிய தீர்வுகள் உள்ளன. இந்தப் பதிவில் குறட்டை பிரச்சனையை நிறுத்த உதவும் 5 வழிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

குறட்டை ஏன் வருகிறது? குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தூங்கும்போது நம் தொண்டை பகுதியில் உள்ள மென்மையான திசுக்கள் தளர்ந்து, காற்று செல்லும் வழியை குறுகச் செய்வதாகும். இதனால், குறுகிய பாதை வழியே காற்று செல்லும்போது திசுக்கள் அதிர்ந்து குறட்டை சத்தம் எழுகிறது. 

குறட்டையை தடுக்கும் வழிகள்: 

  1. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, கழுத்து பகுதியில் அதிக கொழுப்பு இருப்பது குறட்டைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைப்பது குறட்டை பிரச்சனையைக் குறைக்க உதவும். 

  2. பக்கவாட்டில் தூங்குவது குறட்டை வருவதைக் குறைக்கும். குறிப்பாக, இடது பக்கம் திரும்பி தூங்குவது நல்லது. ஏனெனில், இது மூச்சுக்குழாய் வழியாக காற்று செல்வதற்கு உதவுவதால், குறட்டை பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

  3. அதிகமாக மது மற்றும் புகை பிடிப்பது குறட்டை பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். எனவே, இத்தகைய தீய பழக்கத்தை கைவிடுவது மூலமாக, குறட்டையை தவிர்க்க முடியும். 

  4. சிலருக்கு அலர்ஜி காரணமாக மூக்கு மற்றும் தொண்டை பகுதிகள் வீங்கிவிடும். இது மூச்சுக் குழாயை அடைத்து குறட்டை ஏற்பட வைக்கும். எனவே, இத்தகைய பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம். 

  5. தூங்குவதற்கு முன் அதிகமாக உணவு உண்பது செரிமானத்தை பாதித்து குறட்டை ஏற்பட வைக்கும். எனவே, தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பு உணவு உண்பதைத் தவிர்க்கவும்.‌

மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றியும் குறட்டை பிரச்சனை அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், சிலருக்கு குறட்டை சில தீவிரமான உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த 5 விஷயங்களைக் கடைப்பிடிப்பது மூலமாக, குரட்டை பாதிப்பிலிருந்து நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com