மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று சளி, இருமல்; அதன் தொடர்ச்சியாக தொண்டை கரகரப்பு. மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சட்டென நிவாரணம் கிடைக்க வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ள கூடிய எளிய வைத்தியமாக சில வழிகளைப் பார்க்கலாம்.
* கரகரப்பு, தொண்டை க் கட்டு நீங்க மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.
* இஞ்சி சாறு, துளசி சாறு,தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடிக்க சளி, இருமல், மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.
* பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கலையும் விரட்டிடலாம்.
* இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
* உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி யை வறுத்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
* வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து பின் சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் ஆறும்.
* சுடு தண்ணீரில் துளசியை போட்டு ஆவி பிடிக்கலாம். இதனால் சளி, தொடர் இருமல் குணமாகும்.
* மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
* அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.
* மாந்தளிரை நன்றாகக் காய வைத்து பொடித்து அதில் தண்ணீரை கலந்து குடிக்க தொண்டை தொடர்பான பிரச்னைகள் வராது.
* தொண்டைப் புண், எரிச்சல் நீங்க மல்லிகை இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.