இரத்த சோகையை போக்க சாப்பிட வேண்டிய சில சூப்பர் உணவுகள்!

இரத்த சோகை
இரத்த சோகை
Published on

ங்களுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு இரத்தசோகை  என்று பெயர். ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரோட்டின் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்திஅவற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்குக் கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி இரும்புச் சத்து நிறைந்த ஹீமோகுளோபின் நிறைந்த சில உணவுகளை இந்தப் பதிவில் காண்போம்.

பசலை கீரையில் இரும்பு சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

பீட்ரூட்டில் இரும்பு சத்து ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

மாதுளையில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழம். எனவே, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது. இதில் இரும்பு சத்து கொட்டிக் கிடப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

புரோக்கோலி இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்புச் சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது.

தர்பூசணி உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்குவது மட்டுமின்றி உடலுக்கு தேவையான இரும்புச் சத்தையும் வழங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது.

நட்ஸ் வகைகளில் பாதாமுக்கு எப்போதும் தனி இடம் கொடுப்பதற்கு அதில் கொட்டி கிடக்கும் நன்மைகளுக்காக தான். அதில் ஒன்றுதான் இரும்புச்சத்து. அதோடு, அதில் வைட்டமின் ஈ உள்ளது. எனவே, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்கிறது.

வெள்ளை பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்றவை இரும்புச் சத்துக்கு பெயர் போனவை. அதோடு அதில் ஃபோலேட் மற்றும் புரோட்டின் நிறைவாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்!
இரத்த சோகை

உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து காலையில் அருந்தினால் ஹீமோகுளோபின் பிரச்னைகள் தீரும். அத்துடன் ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை அளவிலும் ஒன்பது நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு கூடும்.

கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கண்ணி கீரை, புதினா கீரை, அரைக்கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகமாகும்.

தினையை தொடர்ந்து உட்கொள்வது ஹீமோகுளோபின் மற்றும் சீரம் ஃபெரிடின் அளவை மேம்படுத்த உதவுகிறது. இதனால் இரும்பு சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்னை குறைகிறது.

எள் விதைகளில் இரும்பு, ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள்,  தாமிரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com