வாய் துர்நாற்றத்தைப் போக்க இயற்கை முறையில் சில ஆலோசனைகள்!

some tips to get rid of bad breath
some tips to get rid of bad breathhttps://manithan.com
Published on

வாய் பராமரிப்பு சரியாக இல்லாததால் சில கெட்ட பாக்டீரியாக்கள் வாயில் தங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது சகஜமான ஒன்று. அப்படிப்பட்ட நேரங்களில் பிறருடன் பேசும்போது அது அவர்களை முகம் சுழிக்கவும், விலகிப் போகவும் வைக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

ஒன்றிரண்டு லவங்கத்தை வாயில் போட்டு மெல்வதால் மூச்சுக் காற்றில் ஒரு ரம்மியமான வாசனை சேரும். லவங்கத்திலுள்ள ஆன்டிபாக்டீரியல் குணமானது வாய்க்குள் வளரும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து சுகாதாரத்தை மேம்படுத்தும்.

புதினா, கொத்தமல்லி, துளசி, பார்ஸ்லி போன்ற மூலிகைச் செடிகளின் இலைகளைப் பறித்து வாயில் போட்டு மெல்வதால் அந்த இலைகளிலுள்ள க்ளோரபிலானது வாய்க்குள்ளிருக்கும் கெட்ட வாடையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

பட்டையில் (Cinnamon) இருக்கும் தீமை விளைவிக்கும் கெட்ட நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும் குணமானது, இயற்கை முறையில் பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஒரு சிறு துண்டு பட்டையை வாயிலடக்கி மென்றுகொண்டிருப்பது பாக்டீரியாக்களை அழிக்கவும் மூச்சுக் காற்று மணம் பெறவும் உதவும்.

ஆப்பிள் பழத்தை தோலுடன் கடித்து சாப்பிடுவதால் அதிலுள்ள நார்ப் பகுதியானது பற்களில் படிந்திருக்கும் பிளேக்குகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிடும். ஆப்பிளில் உள்ள இனிப்பு மற்றும் அமிலத் தன்மையானது வாய்க்குள் இயற்கை வாசனையை தக்க வைக்க உதவுகின்றன.

வைட்டமின் C அதிகமுள்ள ஆரஞ்சு, லெமன், கிரேப் போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணும்போது அவற்றிலுள்ள அமிலத்தன்மையானது வாய்க்குள் உமிழ்நீரை அதிகளவில் சுரக்கச் செய்கிறது. அந்த உமிழ்நீருடன் பாக்டீரியாக்கள் அடித்துச் செல்லப்பட்டு, வாய்க்குள் புது மணமும் புத்துணர்ச்சியும் நிலவ ஏதுவாகிறது.

ப்ரோபயோடிக் சத்து நிறைந்த யோகர்ட் உண்பதால், கெட்ட கிருமிகள் அழிந்து நன்மை தரும் கிருமிகள் சமநிலையில் வைத்து காக்கப்படுகின்றன. கெட்ட கிருமிகளால் உண்டாக்கப்பட்ட துர்நாற்றமும் குறையும்.

க்ரீன் டீ குடிக்கும்போது அதிலுள்ள பாலிபினால்கள், துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கின்றன. க்ரீன் டீ உணவுத் துகள்களையும் உடன் எடுத்துச் சென்று வாயை சுத்தப்படுத்தி விடுகிறது.

பாதம், சூரியகாந்தி விதை, எள் போன்றவற்றை உண்ணும்போது அவற்றின் நார்ச்சத்துக்கள் உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் குணமும், அசுத்தங்களை நீக்கி, வாயை சுத்தப்படுத்தி இயற்கைத் தன்மை அடையச் செய்து விடுகின்றன.

இதையும் படியுங்கள்:
பல் ஈறுகளில் திடீரென இரத்தக் கசிவு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?
some tips to get rid of bad breath

க்ரான்பெரி சாப்பிடும்போதும் அதிலுள்ள பாலிபினால்கள் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தை குறைக்கின்றன.

பைனாப்பிளில் உள்ள ப்ரோமெலைன் என்ற ஒரு வகை என்ஸைமானது புரோட்டீனை உடைக்கும் தன்மை கொண்டது. அது பற்களில் பிளேக்குகள் உண்டாவதைத் தடுத்து மூச்சுக்காற்று சுத்தமடைய உதவுகிறது.

இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி வாய் ஆரோக்கியம் காப்போம்; வளமுடன் வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com