
சர்க்கரை நோயால்(Diabetics) அவதிப்படுபவர்கள் அதிகம். சர்க்கரை நோயை நீக்கக் கூடிய அற்புதக் கீரை தான் ஆரைக்கீரை.
ஆரைக்கீரையின் பயன்கள்
ஆரைக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மூன்று கிராம் வீதமான வெந்நீருடன் இப்பொடியை சேர்த்து சாப்பிட்டுவர சர்க்கரை நோயானது கட்டுக்குள் இருக்கும்.
இரத்தத்தில் உள்ள பித்தம் தணியும். இரத்தச் சர்க்கரை அளவானது கண்டிப்பாக குறையும். வாத பித்த கபம் இவைகளில் பித்தம் அதிகரித்து அதன் விளைவாக ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் பித்தம் அதிகரிப்பதால், ஏற்படும் சர்க்கரை நோயின்(Diabetics) பாதிப்பு மிக எளிதாக சம நிலைக்கு வந்து விடும்.
ஆரைக் கீரையை சமைத்து உண்டு வருவதால், மன அழுத்தம் பிரச்னைக்கு நல்ல தீர்வு உண்டாகும். மேலும் இது வலிப்பு நோய் வராமல் பாதுகாக்கும். சர்க்கரை நோயால் வரும் அதிகமான பாத எரிச்சல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
கால் லிட்டர் பசும் பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அதைப் பாதியாக சுண்டக்காய்ச்சி அதில் 5 கிராம் ஆரைக்கீரைப் பொடி கலந்து காலை வேளையில் தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடலுக்கும் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் ஏற்படும்.
ஆரைக்கீரையை பொடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டுவர உடல் சோர்வு நீங்கும். கை கால் நடுக்கம் மற்றும் எரிச்சல் நீங்கும்.
அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்னை தீரும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். கண்பார்வை திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும், சர்க்கரை நோய் வராமல் இருக்கவும், சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் ஆரைக்கீரை அருமருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், அதிக இரத்தப் போக்கு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தும்.
இதன் பொடியை பால் சேர்த்து டீ தயாரித்து அருந்த பலநோய்கள் பறந்து விடும். இது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)