Testosterone என்பது ஆண்களின் மிக முக்கியமான ஹார்மோனாகும். இது ஆண்களின் குணாதிசயங்கள், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. டெஸ்டீரான் அளவு இயல்பை விட குறையும்போது அது பல்வேறு அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இப்பதிகள் அவற்றைப் பற்றிய முழு விவரங்களைக் காண்போம்.
குறைந்த டெஸ்டோஸ்டீரோன் அறிகுறிகள்:
குறைந்த டெஸ்டோஸ்டிரானின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று எப்போதும் சோர்வாக உணர்வதாகும். அது உங்களது ஆற்றலைக் குறைத்து எப்போதும் மந்தமாக உணரச் செய்யும்.
ஆண்களின் ஆரோக்கியமான செக்ஸ் டிரைவை பராமரிக்க டெஸ்டோஸ்டீரான் முக்கியமானது. இது குறையும்போது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, விரைப்புத்தன்மை குறைவது மற்றும் விரைப்புத்தன்மை அடைவதில் சிரமங்களை ஏற்படுத்தலாம். இதனால் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு மனச்சோர்வு, வாழ்க்கையில் எதன் மீதும் பற்று இல்லாமை போன்ற அறிகுறிகளை ஆண்கள் எதிர்கொள்ளலாம்.
டெஸ்டோஸ்டீரான் தசை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. உடலில் அதன் அளவு குறையும்போது தசையின் அளவு குறைவது, வலிமை குறைகள் மற்றும் உடற்பயிற்சி செய்தாலும் தசையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் வளர்ச்சிதை மாற்றம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதைக் காணலாம்.
குறைந்த டெஸ்டோஸ்டீரானின் பக்க விளைவுகள்:
எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிக்க டெஸ்டோஸ்டீரான் அவசியம். குறைந்த டெஸ்டோஸ்டீரான் அளவுகளால் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு பலவீனத்திற்கு வழிவகுக்கும். மேலும் எலும்பு மஞ்சையில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இது மிகவும் முக்கியம். எனவே டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்தால் அது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.
குறைந்த டெஸ்டோஸ்டீரான் அளவுகளால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். மேலும் இது ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும் பங்கு வகிக்கிறது.
உடலில் டெஸ்டோஸ்டீரான் குறைவதால் அது தூக்கத்தின் தரத்தை முற்றிலும் சீர்குலைக்கும். டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக இருக்கும் ஆண்கள் இரவில் தூக்கமின்மை, தூக்குக் கலக்கம் அல்லது தூக்கத்தின் தரம் சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்கலாம்.
ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டீரான் குறைவதால் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அதை முறையாக பராமரிக்க தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அது தவிர ஆரோக்கியமான உணவுகளை சீராக எடுத்துக் கொண்டாலே, டெஸ்டோஸ்டீரான் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.