பெண்களுக்கு ரத்த சோகை இருப்பதற்கான அறிகுறிகள்!

Anemic Girl
Anemic Girl
Published on

ரத்த சோகை பிரச்னையை அதிகம் பேர் எதிர்கொள்கின்றனர். ஆரம்ப ஸ்டேஜிலேயே ரத்த சோகையை கண்டுபிடித்து குணப்படுத்திவிட்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு முதலில் நாம் ஆரம்ப ஸ்டேஜ் அறிகுறிகளைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

உலகளவில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் ரத்த சோகை பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பக்காலத்திலும் கர்ப்பக்காலத்திற்கு பிறகும் ரத்த சோகை ஏற்படுகிறது. உலகளவில் சுமார் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் ரத்த சோகைப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அந்தவகையில் ரத்த சோகையின் அறிகுறிகளைப் பார்ப்போம்.

சோர்வு:

சிவப்பு ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை உடல் வழியாக கடத்திச் செல்கின்றன. உடல் ஆற்றலுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. உங்களிடம் குறைந்த இரத்த சிவப்பணுக்கள் இருந்தால், உங்கள் உடலின் திசுக்கள் மற்றும் தசைகள் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாது. ஆகையால், உடல் சோர்வு ஏற்படும். இது ரத்த சோகையின் அறிகுறிகளில் ஒன்று.

தோல் உரிதல்:

பொதுவாக உள்ளங்கையில் தோல் உரிந்தால் நாம் வளர்கிறோம் என்று நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. உள்ளங்கை மற்றும் கை, கால்களில் தோல் உரிந்தால் ரத்த சோகையின் அறிகுறியாகும்.

வாய்ப் புண்கள்:

இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகை உள்ளவர்களில் 76% பேர் வாயில் எரியும் உணர்வை அனுபவித்ததாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. வாய்ப் புண்கள் மற்றும் வாயின் மூலைகளில் புண் ஆகியவை அறிகுறிகளாகும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு:

சிவப்பு ரத்தம் ஆக்ஸிஜனை கடத்துகிறது என்பதால், ரத்த சோகை இருக்கும்போது குறைந்த அளவு ஹீமோகுளோபின் உங்கள் இதயத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு கடினமாக உழைக்கும். இதனால், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் அல்லது உங்கள் இதயம் மிக வேகமாக அல்லது அசாதாரணமான துடிப்பு போன்ற உணர்வுக்கு வழிவகுக்கும் . அதேபோல் மூச்சுத்திணறல் ஏற்படும்.

தலைவலி:

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவை மூளையைச் சுற்றி அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக ஏற்படும். இதுவும் ரத்த சோகையால் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜெர்மோஃபோபியா உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?
Anemic Girl

கை மற்றும் கால்கள் குளிர்ச்சி அடைதல்:

உடலில் சிவப்பணுக்கள் குறையும்போது கைகள் மற்றும் கால்கள் ஆகியவை குளிர்ச்சியாக இருக்கும்.

வெளிறிய தோல்:

உங்களிடம் குறைந்த இரத்த சிவப்பணுக்கள் இருக்கும்போது, ​​​​அந்த சிவப்பு இரத்தம் மேற்பரப்பில் குறைவாகப் பாயும். இதனால் உங்கள் தோல் சில நிறத்தை இழக்கிறது.  இந்த வெளிறிய தன்மை, குறிப்பிட்ட இடங்களிலோ அல்லது முழு உடம்பிலோ காணப்படலாம்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால், இது ரத்த சோகை அபாயத்தை ஏற்படுத்தும். ஆகையால், உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com