மார்பக புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்!

Breast Cancer
Breast Cancer
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பெண்களை அதிகளவு அச்சுறுத்தும் ஒரு நோய் மார்பக புற்றுநோய். இந்த நோய் வருவதற்கு முன்னரே எப்படி அறிகுறிகளை வைத்து கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

மார்பக புற்றுநோயின் ஆரம்பநிலை டிசிஐஎஸ். இதுவே முதல் கட்டமாகும். இது உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும், இதுவே முதிர்ச்சி அடைந்து அடுத்த நிலைக்கு மாறும். ஆகையால், முதல் நிலை குறித்த அறிகுறிகளைப் பற்றித் தெரிந்துக்கொள்வது அவசியம். அதேபோல் இந்த நிலையிலேயே சிகிச்சையும் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

முதல்நிலையில் மார்பகத்தில் கட்டி ஏற்படாது என்பதால், வலியும் இருக்காது அறிகுறிகளும் இருக்காது. மேமோகிராம் சோதனையின் போது தான் இந்த முதல் நிலை மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படும்.

முதல் நிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டிசிஐஎஸ். இதில் மார்பக குழாயின் புறணியில் அசாதாரண புற்றுநோய் செல்கள் காணப்படும்.

இரண்டாவது முலைக்காம்புகளில் பேஜெட் நோய். இந்த வகையில் அசாதாரண செல்கள் முலைக்காம்புகளின் தோல் செல்களில் காணப்படும். இதுவே புற்றுநோய் நிலையாகும்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

முதல்நிலையில் அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும், இந்த அடிப்படையான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்துக்கொள்ளலாம்.

1.  மார்பகங்களில் வீக்கம் ஏற்படுதல், மார்பகத்தில் வலி, மார்பக பகுதிகளில் நெறிகட்டுதல், மார்பக காம்புகள் உள்ளடங்கிய தோற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.

2.  மார்பக காம்புகளில் புண்கள் எதுவும் ஏற்படாமல், நீர்க்கசிவு, சில நேரங்களில் ரத்தக் கசிவு கூட ஏற்படக்கூடும்.

3.  30 வயதைக் கடந்து விட்டாலே உடல் சோர்வு, பலவீனம் ஏற்பட்டால் கவனிப்பு முக்கியம்.

4.  நம்மை அறியாமலேயே சில நேரங்களில் மார்பகத்தில் கட்டிகள் வளரக்கூடும். இதில் வலி இருந்தாலும், இல்லையென்றாலும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக கருத்தில் கொண்டு முறையான சிகிச்சை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒற்றைத் தலைவலியை தடுக்கும் சூப்பர் உணவுகள்! 
Breast Cancer

யாருக்கு அதிகம் ஏற்படும்?

30 வயது கடந்த பெண்களுக்கு அதிகம் ஏற்படும். சிலருக்கு மரபணு ரீதியாகவும் வரலாம். வயதான காலத்தில் கர்ப்பம் தரித்தவர்கள் மற்றும் அதிக மன உளைச்சல் பாதிப்பில் உள்ளவர்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். மாதவிடாய் நின்ற பின் உடல் எடை அதிகரித்தவர்கள் முதல் மிக இளம் வயதில் பூப்படைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மார்பகத்தை அழுத்தும் அளவிற்கு இறுக்கமாகவும், அசௌரியமாக இருக்கும் ப்ராக்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனாலும் புற்றுநோய் வரும். பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முறையாக கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறதோ இல்லையோ? ஆண்டுக்கு ஒருமுறையாவது கட்டாயம் மார்பாக புற்றுநோய் பரிசோதனை செய்துப் பார்ப்பது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com