நம் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி, ஆரோக்கியம் பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். மேலும், தசை செயல்பாடு, நரம்புகளுக்கு இடையேயான சிக்னல் பரிமாற்றம் மற்றும் ரத்த உறைதல் ஆகியவற்றிலும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத நிலையை ஹைபோகால்சீமியா என அழைக்கின்றனர். இது பல்வேறு சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்:
எலும்பு வலி, எலும்பு முறிவுகள், மூட்டு வலி, மூட்டு இரக்கம், முதுகு வலி.
தசைப்பிடிப்பு, உடல் பலகினம் சோர்வு.
நரம்புகள் சரிவர செயல்படாமல் மரத்து போதல் குத்துதல் எரிச்சல் கை மற்றும் கால்களில் உணர்ச்சியின்மை.
மனநலையில் குழப்பம், மறதி, தலைவலி, மனச்சோறு, பதட்டம் போன்றவை அதிகரிக்கும்.
சருமம் வறண்டு போய், நகம் எளிதில் உடையக் கூடியதாக இருக்கும். மேலும், இது பற்களில் சிதைவுகளையும் உண்டாக்கும்.
இதயத் துடிப்பில் மாற்றங்கள், தூக்கமின்மை அதிகமாக காணப்படும்.
கால்சியம் குறைபாட்டின் காரணங்கள்:
கால்சியம் குறைபாட்டிற்கு பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்கள் போதுமான அளவு உட்கொள்ளாமல் போவதே முதல் காரணமாக இருக்கிறது.
கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் முக்கியம். வைட்டமின் டி குறைபாடு காரணமாகவும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.
சிறுநீரக நோய் ,குடல் நோய், தைராய்டு நோய்கள் போன்ற சில மருத்துவ நிலைமைகள் கால்சியம் உறிஞ்சுதலை பாதித்து, அதிக கால்சிய இழப்புக்கு வழிவகுக்கும்.
ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அளவிட ஒரு எளிய ரத்த பரிசோதனையே போதும். அல்லது DXA எனப்படும் எலும்புகளின் அடர்த்தியை அளவிடும் சோதனைகள் செய்தும் கண்டுபிடிக்கலாம்.
உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகித்தால் தகுந்த மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் தேவைப்பட்டால் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது போன்ற சிகிச்சைகள் மூலம் கால்சியம் குறைபாட்டை விரைவில் சரி செய்ய முடியும்.