நாவல் பழம் - அறிவியல் பெயர் சைஜியம் குமினி.
தமிழில் நாவல் பழம் நாவற்பழம் அல்லது நாகப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஜாமூன் பழம், ஜாவா பிளம், பிளாக் பிளம், ஜம்புல் மற்றும் இந்தியன் பிளாக் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் சீனாவில் நாவற்பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாவற்பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. அதற்கு அடுத்த படியாக உத்தர பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், அசாம் போன்ற மாநிலங்கள் உள்ளன.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுதல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைத் குறைத்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், கண் பார்வையை மேம்படுத்துதல், போன்றவை நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்ஆகும்.
நாவல் பழத்தில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளன. நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கல் வாயு தசைப்பிடிப்பு வயிற்றுப் போக்கு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
நாவல் பழத்தில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை பிணைக்கும் ஹீமோகுளோபின் உற்பத்தியை மேம்படுத்த இரும்பு சத்து உதவுகிறது. இதன் மூலம் மூளைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
நாவற்பழம் தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு கட்டமைப்பின் முக்கிய கூறு ஆகும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நாவல் பலத்தை அடிக்கடி உட்கொள்வது எலும்பை வலுவாக வைத்து ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாவற்பழம் உட்கொள்வது இரத்த சோகை மற்றும் இரத்த சோகையினால் ஏற்படும் சோர்வு பலவீனம் தலைவலி ஒழுங்கற்ற நாடி துடிப்பு போன்றவற்றைத் தடுக்க உடலில் போதுமான இரும்புச்சத்து இருப்பதை உறுதி செய்கிறது. நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமாமல் செல்களின் மீள் உருவாக்கத்துக்கும் உதவி செய்கிறது.
நாவல் பழத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் சருமத்தை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாத்து முகப்பரு புண் போன்ற பல்வேறு வகையான பாக்டீரியா தொற்றுகளை தடுக்கிறது.
நாவல் பழத்தை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாக கூறப்படுகிறது. ஆகையால் குறைவான ரத்தச் சர்க்கரை அளவு கொண்டவர்கள் உள்ளவர்கள் தவறுதலாக கூட இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன் சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். பற்களில் பிரச்னை உள்ளவர்கள் நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும். வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள் நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
வயிற்றில் அமிலப் பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.
இதனால்தான் நாம் பண்டிகை நாட்களில் இப்பழத்தின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.