எவ்வளவு வயதானாலும் கண் பார்வை மங்காமல் பளீச்சென்று தெரிய இந்த காய்கறிகளை அன்றாடம் எடுத்துக்கொண்டு வரலாம்.
இப்போதெல்லாம், சிறு வயதிலிருந்தே பலருக்கு கண் பார்வை மங்கலாகிறது. பலர் கண்ணாடி போடுவதையும் லென்ஸ் போடுவதையும் வழக்கமாக்கி வருகின்றனர். அதேபோல், 40 வயதை அடைந்தால், கண் பார்வை மங்கலாகும் நிலை வந்துவிடுகிறது. அதற்கு காரணம் நமது உணவு பழக்க வழக்கத்தின் மாற்றம் என்றே கூறலாம்.
அந்தவகையில், எந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், எவ்வளவு வயதானாலும் கண் பார்வை மங்காமல் பளீச்சென்று தெரியும் என்று பார்க்கலாம்.
குடைமிளகாய்:
பொதுவாக குடைமிளகாயை நாம் அதிகம் வாங்கவும் மாட்டோம். விரும்பி சாப்பிடவும் மாட்டோம். ஆனால், குடைமிளகாயில், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. ஆகையால், உணவில் குடைமிளகாயை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.
கேலே:
பரட்டைக்கீரை எனப்படும் கேலேவில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை உள்ளன. இதிலும் லூடின் மற்றும் ஜியாக்ஸாந்தின் ஆகிய ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம். இவை கண்களில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து கண் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
பூசணிக்காய்:
மஞ்சள் பூசணிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. இவை கண் பார்வையை மேம்படுத்தும் வைட்டமின்கள் என்பதால், வாரம் 2 முதல் 3 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ப்ரோக்கோலி:
கேரட்டிற்கு அடுத்து அதிகப்படியான வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி ப்ரோக்கோலி. இதில் கண்பார்வைக்குத் தேவையான ஆண்டி ஆக்சிடண்ட்டுகளாக லூடின் உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன.
கேரட்:
கேரட் சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது 100 சதவீதம் உண்மையே. நாம் தினசரி கேரட்டை உணவில் எடுத்துக்கொள்ளலாம். கண் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருக்கிறது. அனைவருமே தினமும் ஒரு பச்சை கேரட்டை சாப்பிட்டு வரலாம்.
கீரை வகைகள்:
கீரைகளில் லூடின் மற்றும் ஜியாகசாந்தின் போன்ற ஆற்றல் வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் இருக்கின்றன. அதேபோல், இரும்புச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை கண் பார்வையை மேம்படுத்தும்.
மேற்சொன்ன அனைத்து காய்கறிகளையும் வழக்கமாக உணவில் சேர்த்து வந்தாலே, கண் பார்வை மங்காமல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.