

மெடபாலிசத்தால் நாம் உண்ணும் உணவு சக்தியாகிறது. சிலவகை பானங்கள் இரவு உட்கொள்வதால், மெடபாலிசம் தூண்டப்படும் (night time health drinks). அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. இனிப்பில்லாத கெஃபிர்
இது புளிக்கவைத்த புரதம் மற்றும் ப்ரோபயாடிக் நிறைந்த பானம். குடல் ஆரேக்கியம் மற்றும் செரிமானத்தை இது ஆரோக்கியமாக்கும், நோய் எதிர்ப்பையும் ஊக்குவிக்கும். இதில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடி அல்லது பெர்ரி சேர்த்து உட்கொள்ள மெடபாலிசம் மேம்படும்.
2. சாமோமைல் டீ
இது சோர்வை போக்கி நல்ல தூக்கத்தை தரக்கூடியது. லெப்டின் மற்றும் க்ரெலின் போன்ற ஹார்மோன்களை சமன்படுத்தும். இதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து அருந்துவதால், அழற்சியைக் குறைத்து நோயெதிர்ப்பை அதிகப்படுத்தும்.
3. வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
உடல் நச்சுக்களை இது நீக்கி வயிறு உப்புசத்தைத் தடுக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்ததால் நோயெதிர்ப்பு அதிகரிக்கும்.
4. பட்டை டீ
இது மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும். ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும். சீனி சேர்க்காமல் அருந்துவது நல்லது.
5. ஆப்பிள் சிடார் வினீகர்
செரிமானம் சீராகவும், சர்க்கரையைக் கட்டுக்குள்ளும் வைக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் வினீகரை ஒரு டம்பளர் வெது வெதுப்பான நீரில் சேர்த்து அருந்தவும். இதோடு பட்டைபொடி தேன் சேர்ப்பது நல்லது.
6. இஞ்சி டீ
அழற்சியைக் குறைத்து செரிமானத்தை சீராக்கும் பானம். இதோடு சிறிது புதினா இலை மற்றும் தேன் சேர்க்க மெடபாலிசம் மேம்படும்.
7. காஃபீன் இல்லாத க்ரீன் டீ
காடெசின் நிறைந்த இதில் இஞ்சியும், புதினாவும் சேர்த்து இரவில் அருந்தலாம்.
8. மஞ்சள் பால்
இதில் சிறிது மிளகும் பொடியும், பட்டைப் பொடியும் சேர்த்து உட்கொள்ள அழற்சியைக் குறைத்து மெடபாலிசத்தை ஊக்குவிக்கும்.
9. பெப்பர்மிண்ட் டீ
செரிமானத்திற்கும் ஏற்றது. படுக்கப் போகுமுன் இரவில் உட்கொள்வதால், வயிறு உப்புசம் தடுக்கப்படும்.
10. வெள்ளரி புதினா பானம்
குறைந்த கலோரி கொண்ட பானம் வெள்ளரி நீரேற்றத்தை தரும். இதன் நார்சத்து செரிமானத்தை சீராக்கும். புதினா வயிற்றை குளிர் வைக்கும் இந்த பானம் உடல் நச்சுக்களை நீக்கும். மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)